சுவையான ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் காளான் டிக்கா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் - 1 பாக்கெட்
கெட்டித் தயிர் - 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையில் சுத்தம் செய்து வைத்த முழு காளான் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய காளானை டிக்கா குச்சியில் முதலில் குடை மிளகாய், பிறகு வெங்காயம், அதன் பிறகு காளான் என அடுக்கடுக்காக அடுக்கிக் கொள்ளவும். பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும். அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடு செய்து, அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் காளான்களை வாட்டி ஒவ்வொரு மூன்று நொடிக்கு ஒரு தடவை திருப்பி போட்டு, 15 நிமிடம் மசாலா வற்றி காளான் வெந்தவுடன் எடுத்தால் சுவையான காளான் டிக்கா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“