/indian-express-tamil/media/media_files/2025/09/07/screenshot-2025-09-07-142558-2025-09-07-14-26-18.jpg)
தமிழ் சினிமாவில் ஒரு சில இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே சிறந்த ஓப்பனிங் கிடைத்தது. அப்படியான ஓப்பனிங்கிற்கு சொந்தக்காரர் ஜி.வி. பிரகாஷ் குமார். 90’ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தை விளக்கும் விதமாக ஒருபாடலைக் கூறுங்கள் என்று மைக்கை நீட்டினால் பெரும்பாலான 90’ஸ் கிட்ஸ்களின் முதல் தேர்வு வெயில் படத்தில் இடம்பெற்ற, “வெயிலோடு விளையாடி” பாடலாகத்தான் இருக்கும். இயக்குநர் வசந்த பாலனின் வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
ஆனால் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பாடல் பாடி, பாடகராக அறிமுகமாகியிருந்தார் இவர். ஜெண்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் வரும் குழந்தையின் குரல் ஜி.வி. பிரகாஷ் குமாருடையதுதான். வெயில் படத்தில் வெயிலோடு விளையாடி பாடல் மட்டும் இல்லாமல் உருகுதே உருகுதே பாடலும் எவர் கிரீன் ஹிட்.
அறிமுக படத்திலேயே பலரது பாராட்டைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ், ஓவர் நைட்டில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறிவிடவில்லை. தனக்கு வந்த பாராட்டுகளை தக்கவைத்துக் கொள்ள எடுத்த சிரத்தைகளின் வெளிப்பாடுதான், இன்றைக்கு அவருக்கான ப்ளே லிஸ்ட்டுகள் வானொலிகளில் இருந்து ஸ்பாட்டிஃபை போன்ற நவீன இசைத்தளங்களிலும் உள்ளது. சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு இதுவரை ஜி.வி. இசைமைத்துள்ளார்.
வெயில் படத்துக்குப் பின்னர் இவரது இசையில் வெளியான கிரீடம், பொல்லாதவன் படங்கள் அன்றைய வானொலிகளை ஆக்கிரமித்தது. இசையமைப்பாளராக, பாடகராக இசைப் பிரியர்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இன்றைக்கும் விருந்து வைத்துக்கொண்டு இருக்கின்றார். குறிப்பாக ஜி.வி. பிரகாஷ்குமார், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்துவிட்டாலே அந்த படத்தின் இசையின் தரம் என்பது மற்ற படங்களின் இசையை அதனுடன் போட்டிக்கே வராது எனும் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்.
காதலை தனது இசையின் மூலம் கடத்தும் வல்லமை கொண்ட ஜி.வி. மனிதனின் மற்ற உணர்வுகளையும் தனது இசையால் கடத்தி ரசிகர்கள் மனதில் காலத்தால் அழிக்கமுடியாத சிம்மாசனத்தை எழுப்பியுள்ளார். அந்த வரிசையில், தெய்வத்திருமகன் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு, மதராசப்பட்டினத்தில் இடம் பெற்றுள்ள, பூக்கள் பூக்கும் தருணம் பாடல், டார்லிங் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல், ஆடுகளம் படத்தில் இடம் பெற்றுள்ள யாத்தே யாத்தேவும், ஐய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடலும், மயக்கம் என்ன படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே உயிரே, அங்காடித்தெருவில் இடம்பெற்றுள்ள உன்பேரைச் சொல்லும்போதே, தாண்டவம் படத்தின் ஒருபாதி கதவு பாடல், அசுரன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மெஹா ஹிட் அடித்தது.
இப்படி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜி வி பிரகாஷ் தற்போது ஒரு சமீபத்திய நேர்காணலில் தான் எப்படி இப்போதெல்லாம் எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்ய பழகிவிட்டதாக கூறியிருக்கிறார். ""ஆரமபகாலத்தில் வெயில், அங்காடி தேறி, அசுரன் போன்ற படங்களுக்கு எனக்கு தேசிய விருது கிடைக்காத போது நிறைய பேர் எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அப்போது நான் முடிவெடுத்தேன். விருது கிடைக்கும் என்று நினைத்து நான் வேலை செய்ய கூடாதென்று, அதிலிருந்து நான் பாட்டுக்கு என் வேலையை மனா நிறைவோடு செய்து முடிப்பேன். நம் வேலையை நாம் ஒழுங்காக செய்து கொண்டே இருந்தால் அது என்றைக்காவது கண்டிப்பாக அங்கீகரிக்கப்படும்.
"நான் தேசிய விருது வாங்குவேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு சுதா கொங்கரா போன் செய்தார்கள். நீ ஜெய்ச்சிட்ட.. பொய் பாரு என்று அவர் தான் கூறினார். அப்போது தான் எனக்கு புரிந்தது, எதிர்பார்ப்புகள் இருந்தால் நாம் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலை கூட ஒழுங்கா செய்ய மாட்டோம். அதன் பிறகு நான் என் வேலையை பலன் எதிர்பார்க்காமல் செய்ய கற்றுக்கொண்டேன்." என்று கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.