சுவையான முலாம் பழ மில்க் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முலாம் பழம் - 1/2 கப் அளவு
பால் - 1 டம்ளர்
சர்க்கரை - 1/4 கப்
செய்முறை
முலாம் பழத்தின் தோல், விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸி ஜாரில் முலாம் பழத்தை போட்டு அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, பால் சேர்த்து அரைக்கவும். இதனை ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும். பின்பு அதை எடுத்து சாப்பிடும் முன் முலாம்பழ துண்டுககளை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வளவு தான் முலாம் பழ மில்க் ஷேக் தயார்.