கோவையில், இஸ்லாமியர், இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்விற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கோவை, போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள பி.வி.ஜி திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவர்கள் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிக்ழவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கோவை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என மூன்று மதத்தினரும் இதில் பங்கேற்று மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், மாற்றுத்திறனாளி ஒருவரும் பங்கேற்று பிரார்த்தனை செய்து நோன்பு கஞ்சியை உட்கொண்டார்.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
செய்தி - பி.ரஹ்மான்