scorecardresearch

இந்த கோடையில் நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய மலை வாச ஸ்தலங்கள்!

Plan Hill station For Summer Vacation in India, Hill station For Summer Vacation 2022, Best hill station in India for a Memorable Holiday- வெவ்வேறு வகையான அமைதியை அனுபவிக்க, நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்கள் இதோ.

Hill stations For Summer Vacation in India (2022)
Best Summer vacation Hill station, Hill station of India to visit This summer season

கொளுத்தும் வெயிலில் இருந்து சிறிது நேரம் தப்பிக்க ஆசையா? அதற்காக நீங்கள் இமயமலைக்கு செல்ல வேண்டியதில்லை. தென்னிந்தியாவில்’ உள்ள இந்த மலைகள் உங்களுக்கு மன அமைதியையும், நல்ல புத்துணர்ச்சியையும் தரும்.

வெவ்வேறு வகையான அமைதியை அனுபவிக்க, நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்கள் இதோ.

சக்லேஷ்பூர், கர்நாடகா

‘கர்நாடகத்தின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும், ஹாசனில் இருந்து 956 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சக்லேஷ்பூர். இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சிகளை ரசிக்கலாம். காபி, தேநீர் தோட்டங்களால் இந்த இந்த இடம் சூழப்பட்டிருக்கிறது..

சக்லேஷ்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று பல ஆண்டுகள் பழமையான மஞ்சராபாத் கோட்டை. ஹேமாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான சக்லேஷ்வரா கோவில். பிஸ்லே வியூ பாயின்ட், இது சுற்றியுள்ள மலைகள் மற்றும் அப்பகுதியின் மழைக்காடுகளின் பரந்த காட்சியை வழங்குகிறது. இதில் தொலைவில் உள்ள புஷ்பகிரி, தொட்டபெட்டா மற்றும் குமார பர்வத மலைகள் வரை நீங்கள் பார்க்கலாம்.

Best hill station in India for a Memorable Holiday, Hill station trial in India for summer time Holiday, Best summer vacation Hill station in India

பாபி ஹில்ஸ், ஆந்திரப் பிரதேசம்</strong>

ஆந்திராவின் ராஜமுந்திரியில் அமைந்துள்ள பாபி ஹில்ஸ் உண்மையிலேயே ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம். இந்த மலை பாபிகொண்டா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது, இங்கு அற்புதமான கோதாவரி ஆறு வளைந்து செல்கிறது.

இந்த மலைகளின் அழகு பெரும்பாலும் காஷ்மீரில் உள்ள மலைகளுடன் ஒப்பிடப்படுகிறது. பல சுற்றுலா பயணிகள் பாபி மலையை ‘ராஜமுந்திரியின் மினி காஷ்மீர்’ என்று அழைக்கின்றனர்.

தேவிகுலம், கேரளா

நீங்கள் மூணாருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், தேவிகுளத்திற்கு மாற்றுப்பாதையில் செல்லவும். இந்த இடத்தின் பசுமையில் மூழ்கி, அதன் தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரியுங்கள், உங்களுக்கு நேரம் இருந்தால், அருகிலுள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தைப் பார்வையிடவும்.

பொன்முடி, கேரளா

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்முடி என்பது ‘கோல்டன் ஹில்’ அல்லது ‘கோல்டன் பீக்’ என அழைக்கப்படுகிறது. இந்த இடம் பகலில் மூடுபனியால் மூடப்பட்டிருப்பதைக் காணலாம். பொன்முடியில் மிகவும் பிரபலம் வரையாடுமோட்டா மலையேற்றம், இது மலைகளின் பரந்த காட்சியை வழங்குகிறது.

வழியில் சாலைக்கு இணையாக எதிர் திசையில் பாயும் கல்லார் ஆற்றில், அழகிய மீன்முட்டி நீர்வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.  இப்பகுதியில் ட்ரீ ஹவுஸ் வியூ டவர் பார்க்க வேண்டிய மற்றொரு சிறந்த இடம்.

வால்பாறை, தமிழ்நாடு

அழகிய ஆனைமலை மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள வால்பாறை மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. யானைகள் மற்றும் காண்டாமிருகங்களால் நிரம்பிய பச்சை தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த மலைவாசஸ்தலமானது, குழந்தைகளுக்கான புத்தகத்திலிருந்து வெளியே வருவது போல் உணர்வைத் தருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Must visit mountain destinations in south india in summer