வானில் நட்சத்திரங்களை மெய்மறந்து பார்க்கும் போது, சில சமயங்களில் நம்மையும் மறந்து விடுவோம்.
ஆனால் அதிகளவு ஒளி மற்றும் காற்று மாசுபாடு மற்றும் பரந்த வெளிகள் இல்லாததால், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திரங்களை முழுமையாக ரசிக்க முடியாது.
வெறித்தனமான கூட்டத்திலிருந்து வெகு தொலைவில், நட்சத்திரங்களை விரும்பும் ரசனையாளனின், மகிழ்ச்சிக்குரிய இடங்களின் பட்டியல் இங்கே உள்ளது. நீங்கள் எங்கு செல்ல விரும்பினாலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனா பயண விதிமுறைகளை சரிபார்க்க மறக்காதீர்கள்.
ஜெய்சல்மர், ராஜஸ்தான்
அலையில்லாத மணல் திட்டுகளுக்கு மேல், இரவு வானத்தின் அழகிய காட்சியுடன், நீங்கள் ஜெய்சால்மரில் நட்சத்திரங்களைப் பார்த்து மகிழலாம். குன்றுகளால் துளையிடப்பட்ட ஒரு பரந்த வெற்று நிலப்பரப்பின் அனுபவம்’ இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சர்ரியல் அனுபவமாகும்.
டிசுகோ பள்ளத்தாக்கு, நாகாலாந்து
நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் எல்லையில், டிசுகோ பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் உள்ளது. இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமான இது வடகிழக்கில் அதிகம் அறியப்படாத மலையேற்ற இடமாகும். பரந்து விரிந்து கிடக்கும் பச்சை மலைகள், நட்சத்திரங்களை உற்று நோக்குவதற்கு ஏற்றதாக அமைகிறது. டிசுகோ பள்ளத்தாக்கை அடைய எளிதான வழி திமாபூருக்கு (Dimapur) விமானத்தில் செல்வதுதான்.
கோகர்ணா, கர்நாடகா
data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
கோகர்ணா, கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கடற்கரை கோயில் நகரமாகும், இது இரவு நேர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது. கடற்கரையில் உள்ள குடில்கள் மற்றும் கஃபேக்களில் பெரும்பாலும் மக்கள் கூட்டம் இருந்தாலும், கூட்டம் குறைவாக உள்ள கடற்கரை ஒன்றில், இரவில் தங்குவதற்கு நீங்கள் தேர்வு செய்யலாம். சூரியன் வெளியே வரும் வரை மணலில் படுத்து நட்சத்திரத்தை உற்றுப் பாருங்கள்.
பிர், இமாச்சல பிரதேசம்
பிர் இந்தியாவின் பாராகிளைடிங் தலைநகராக அறியப்படுகிறது. ஒரு அமைதியான இரவு, நட்சத்திரங்களைப் பார்க்க ஒரு சிறந்த இடமாக இருக்கிறது.
ஹேவ்லாக் தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவு இந்தியாவின் மிகவும் அமைதியான இடங்களில் ஒன்றாகும். சுத்தமான கடற்கரைகள், நீல வானத்தின் நிறத்தை பிரதிபலிக்கும் நீர், ஹேவ்லாக் நிச்சயமாக நீங்கள் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இரவில் இங்கு நட்சத்திரத்தை பார்க்க மட்டும் முடியாது, நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் உங்கள் கால்களால் நட்சத்திரங்களைக் காணலாம். நிலவு இல்லாத இரவில் நீங்கள் கடலில் இருக்கும்போது, கடலில் பைட்டோபிளாங்க்டன் (phytoplankton) இருப்பதால் அது ஒளிரும்.
அலப்பி/ஆலப்புழா, கேரளா
ஆலப்புழா அதன் காயல் மற்றும் படகு வீடுகளுக்காக நன்கு அறியப்பட்டதாகும். கேரளாவின் வர்த்தக முத்திரையாக விளங்கும் இந்த இடத்தின் அமைதியான, கிராமப்புற சூழல், ஆண்டின் இந்த நேரத்தில் தெளிவான வானத்தால் நிரப்பப்படுகிறது, இது நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“