இந்த கிராமத்தில இருக்கிறவங்களை பெயர் சொல்லி கூப்பிட மாட்டாங்களாம்.. அப்புறம் எப்படி கூப்பிடுவாங்க?

கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள ஒரு மேகாலய கிராமம் கோங்தாங். இது இசை வழங்கும் பண்டைய பாரம்பரியத்தின் தாயகமாகவும் உள்ளது. இங்குள்ள கிராமவாசிகள் அவர்களின் பெயர்களால் அல்ல, ஒரு குறிப்பிட்ட ட்யூனால் தான் அறியப்படுகிறார்கள்.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) ‘சிறந்த சுற்றுலா கிராமம்’ வரிசையில் மூன்று இந்திய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேகாலயாவின் கோங்தாங், தெலுங்கானாவின் போச்சம்பள்ளி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லத்புரா காஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்தன. இந்த கிராமங்களின் சிறப்பைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

கோங்தாங், மேகலாயா!

கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள ஒரு மேகாலய கிராமம் கோங்தாங். மேகாலயாவின் சோஹ்ரா மற்றும் பைனுர்ஸ்லா மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள அழகிய, அமைதியான கிராமம், அதன் அழகான நிலப்பரப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது இசை வழங்கும் பண்டைய பாரம்பரியத்தின் தாயகமாகவும் உள்ளது. இங்குள்ள கிராமவாசிகள் அவர்களின் பெயர்களால் அல்ல, ஒரு குறிப்பிட்ட ட்யூனால் தான் அறியப்படுகிறார்கள். காங்தாங் ‘இந்தியாவின் விசில் கிராமம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

போச்சம்ப்பள்ளி, தெலுங்கானா!

பூதன் போச்சம்பள்ளி என்பது தெலுங்கானா மாநிலத்தின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சென்சஸ் டவுண் ஆகும். இந்த இடம் அதன் பாரம்பரிய நெசவுக்காக அறியப்படுகிறது, இகாட் சாயத்தின் (ikat style of dyeing) ஜியொமெட்ரிக் வடிவ பட்டுகளுக்கு இந்த கிராமம் பிரசித்தி பெற்றது. இந்த ஜவுளியை மொத்தமாக உற்பத்தி செய்யும் ஆயிரக்கணக்கான தறிகள் இந்த கிராமத்தில் உள்ளன. போச்சம்பள்ளி புடவைகளுக்கு அதன் தனித்தன்மைக்காக, 2005 ஆம் ஆண்டு புவியியல் குறியீடு (GI) அந்தஸ்தைப் பெற்றது.

லத்புரா காஸ், மத்திய பிரதேசம்!

லத்புரா காஸ் கிராமம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திகம்கர் மாவட்டத்தில், ஓர்ச்சா தெஹ்சிலில் (Orchha Tehsil) அமைந்துள்ளது. இது மற்றொரு பிரபல சுற்றுலா தலமான ஓர்ச்சாவிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

லத்புராகாஸின், கிராமப்புற குடியிருப்புகளில் தங்குவது உள்ளூர், கிராமப்புற வாழ்க்கை முறையை அனுபவிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கும். அத்துடன், ஓர்ச்சாவின் எண்ணற்ற அற்புதமான இடங்களை பார்வையிடுவது, புந்தேல்கண்ட்-ன் (Bundelkhand) பண்டைய இராஜ்ஜியம் மற்றும் எஞ்சியிருக்கும் நினைவுச்சின்னங்கள் பற்றிய நுண்ணறிவை உங்களுக்கு வழங்குகிறது.

இந்த இடங்களை உங்கள் பக்கெட் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Must visit villages in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com