தினம் மாறக்கூடிய கால நிலையினால் உடல்நலத்துடன் சருமம் மற்றும் தலைமுடியும் பாதிப்படைக்கின்றது.
குளிர்காலத்தில் சருமம் மற்றும் தலை முடியை ஈரப்பதத்துடன் பாதுகாப்பதென்பது சிரமம். ஆனால் வறண்ட தலைமுடியை பராமரிக்க நம் சமையல் அறைகளிலேயே பொருட்கள் உள்ளது.
சமையல் அறையில் இருக்கும் கடுகு எண்ணெய் உங்களின் வறண்ட கூந்தலுக்கு நிரந்தர தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யில் ஒமேகா 3 உள்ளதால் வறண்ட தலைமுடிக்கு வளர்ச்சியையும் பளபளப்பையும் தரும்.
பெரும்பாலும் உலர்ந்த உச்சந்தலையில் அரிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் கடுகு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
ஹெர் மாஸ்க் தயார் செய்ய தேவையான பொருட்கள்
கடுகு எண்ணெய்
தயிர்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கடுகு எண்ணெய்யுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அந்த கலவையை முடியின் வேர் பகுதியில் நன்றாக தேய்த்து விட வேண்டும். பின் சுத்தமான துணியை சுடுதண்ணியில் நனைத்து தலை முடியைச் சுற்றி நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் வைத்திருந்து பின் ஷாம்புவை தேய்த்து தலையைக் கழுவிவிட வேண்டும்.
இதை தொடர்ந்து செய்து வர தலை முடிக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.