புதுவிதமாக கடுகு துவையல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சாப்பாடு, இட்லி, தோசைக்கும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு- 5 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 5 ஸ்பூன்
தக்காளி-2
காய்ந்த மிளகாய்-4
பூண்டு- 6 பல்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு ஒரு 5 ஸ்பூன், உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் வைத்து வதக்கவும். குறிப்பு: கடுகை கருக விட்டுவிடக் கூடாது. துவையலின் சுவையை மாற்றி விடும். மிதமாக வதங்கியதும் அதே கடாயில் பூண்டு, வரமிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் .
பின்னர் அடுப்பை நிறுத்தை கலவையை ஆறிவிட்டு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்த கலவையை சேர்த்து கறிவேப்பிலை உடன் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னி அரைப்பது போல் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு இதில் கடுகின் கசப்பு தெரிகிறது என்றால் சிறிய அளவில் வெல்லம் சேர்த்து அரைக்கலாம். அவ்வளவு தான் சுவையான கடுகு துவையல்/சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“