இந்த முட்டை மிட்டாய் ரெசிபி மிகவும் பிரபலமான ஒன்று. ஒரு முறைதால் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
தேவையான அளவு
6 முட்டை
200 கிராம் சர்க்கரை
இனிப்பு இல்லாத பால்கோவா 200 கிராம்
50 கிராம் பாதம்- பால் சேர்த்து அரைத்தது
3 டேபிள் ஸ்பூன் நெய்
மஞ்சள் நிற புட் கலர்
செய்முறை: முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதில் சர்க்கரை சேர்த்து அடித்துகொள்ளவும். சர்கக்ரை நன்றாக கரைந்த உடன், அதில் பால்கோவா சேர்க்கவும். தொடர்ந்து. பாதாம் பால் சேர்த்து நன்றாக அடித்துகொள்ளவும். பாதமை, பாலுடன் சேர்த்து அரைத்துகொண்டால் பாதாம் பால் ரெடி ஆகிடும். தற்போது இதில் 2 ஸ்பூன் நெய், மஞ்சள் புட் கலர் சில ஸ்பூன்கள் சேர்த்து அடித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, அதில் இந்த கலவையை கொட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளரவும். தொடர்ந்து, அவனை 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்ய வேண்டும். ஒரு டிராவில் பட்டர் தடவி, அதில் இந்த கலவையை ஊற்ற வேண்டும். மேலாக நெய் சேர்த்து கொள்ளவும். 40 நிமிடங்கள் பேக் செய்யவும். தொடர்ந்து வெளியில் எடுத்து, முட்டை மிட்டாய் மீது நெய் தட வேண்டும். அரை மணி கழுத்து சதுரமாக வெட்டி எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“