Muttai sadham, Muttai sadham recipe : விரைவாக சமைக்கக் கூடிய ஒரு சாத வகை. அதை பச்சடியுடன் அல்லது அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளுக்கான லன்ச் பாக்ஸ் ரெசிப் ஆரோக்கியமான ஈஸி லன்ச் பாக்ஸ் ரெசியும் கூட.
Advertisment
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
Advertisment
Advertisements
வெங்காயம் - 50 கிராம்
ப.மிளகாய் - 5
சீரகம் - 1/2 கரண்டி
நெய் - 2 கரண்டி
எலுமிச்சை பழம் - 1/2 பழம்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
வெங்காயம். கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் முட்டைகளை அடித்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.முட்டை கலவை வெந்து பூ போல உதிரியாக வந்ததும் சாதத்தை போட்டு கிளறவும்.1
அடுத்து அதில் 1/2 எலுமிச்சை பழம் பிழிந்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான முட்டை சாதம் ரெடி.