இப்படி ஒரு முறை மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி நீங்களும் வீட்டில் செய்துபாருங்க
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 200 எம்.எல்
நெய் – 200 கிராம்
பிரியாணி இலை – 3
கல்பாசி – 2 ஸ்பூன்
ஏலக்காய்- 10
பட்டை – 4
கிராம்பு -10
பச்சை மிளகாய் – 10
ஜாதிப்பத்திரி- 2
கருவேப்பிலை – 1 கொத்து
புதினா- 1 கொத்து
தயிர்- 250 கிராம்
3 பெரிய வெங்காயம்
தக்காளி – 3
பிரியாணி பொடி – 15 கிராம்
கொதமல்லி பொடி – 15 கிராம்
மிளகாய் பொடி – 10 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது- 250 கிராம்
மட்டன் ( எலும்புடன்) – 1 கிலோ
எலுமிச்சை – அரை பழம்
சீரக சம்பா- 1 கிலோ
உப்பு
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை : சீரக சம்பா, தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். மட்டனை குக்கரில் சேர்த்து, எண்ணெய் சேர்த்து கிளரவும். மட்டன் நன்றாக சுருங்கியதும், உப்பு, மஞ்சள் பொடி, 4 கப் தண்ணீர் சேர்த்து 6 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து ஒரு கனமான பாத்திரத்தில், எண்ணெய் , நெய், சேர்த்து பிரியாணி இலை, கல்பாசி, பட்டை, ஏலக்காய், ஜாதிபத்திரி, கருவேப்பிலை என்று எல்லா மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கிளரவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். தொடர்ந்து இதில் பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி பொடி, சேர்த்து கிளரவும். தக்காளி, புதினா சேர்த்து கிளரவும். தயிர், சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் மட்டன் வேந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து இதில் மட்டன் சேர்க்கவும். அரிசி சேர்க்கவும். மட்டன் வேக வைத்த தண்ணிர், கூடுதலாக தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு எடுக்கவும். சப்பாத்தி கல்லை மேலாக வைத்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து தம் போடவும்.