Mutton Kulambu Recipe In Tamil, Mutton Kulambu Tamil Video: அசைவப் பிரியர்களின் முதன்மையான தேர்வு மட்டன் குழம்பாகவே இருக்கும், குறிப்பாக வீக் எண்ட் நாட்களில் மட்டன் உணவு விரும்புகிற அசைவப் பிரியர்கள் அதிகம். அதேசமயம் இல்லத்தரசிகளில் எல்லோருக்கும் மட்டன் குழம்பு கைப்பக்குவம் வாய்ப்பதில்லை.
Advertisment
மட்டன் குழம்பு, மலைக்க வேண்டிய விஷயமே அல்ல. சிம்பிளாக பேச்சிலர்கள்கூட குக்கரில் மட்டன் குழம்பு வைத்து சாப்பிடலாம். குக்கரில் எப்படி மட்டன் குழம்பு வைப்பது? என இங்கு காணலாம்.
Mutton Kulambu Tamil Video: மட்டன் குழம்பு
Advertisment
Advertisements
மட்டன் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: ஆட்டுக் கறி - 1 கிலோ, கடலை எண்ணெய் - 40 மிலி, பட்டை - 2 துண்டு, ஏலக்காய் - 3, ஸ்டார் பூ- 2, பிரிஞ்சு இலை - 1, சோம்பு - 1/2 டீ ஸ்பூன், சின்ன வெங்காயம் - 15, கருவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி- பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன், தக்காளி - 2, மஞ்சள் பொடி - 1 டீ ஸ்பூன், மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன், மிளகு பொடி - 1/2 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மட்டன் குழம்பு பொடி - 3 1/2 டீ ஸ்பூன், தண்ணீர் - 2 கப், முந்திரி - 10, கசகசா - 3/4 டீ ஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு
மட்டன் குழம்பு செய்முறை:
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை போட்டு வதக்குங்கள். பிறகு சோம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்தும், அடுத்து தக்காளி சேர்த்தும் வதக்கவும்.
நன்கு வதங்கியதும், சுத்தப்படுத்திய மட்டனை சேர்த்து அதோடு மஞ்சள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறுங்கள். மசாலா நன்கு மட்டனில் சேரவேண்டியது முக்கியம். பிறகு மிளகுப் பொடி, மட்டன் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து கிளற வேண்டும். தேவைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரை மூடி, 5 விசில் வரும்வரை வேக விடுங்கள்.
இதற்கிடையே முந்திரி மற்றும் கசகசாவை மைய அரைத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் 5 விசில் முடிந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து மீண்டும் அடுப்பை பற்ற வைத்து குக்கரில் குழம்பை கொதிக்க வையுங்கள். ஒரு கொதி வரும் போது அரைத்த முந்திரி பேஸ்டை சேருங்கள்.
கடைசியாக 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குக்கரை இறக்குங்கள். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"