அன்பாலே என்னை மாத்தினாங்க; லதாவை கண்கலங்க வைத்த ரஜினி

திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது வெற்றிக்குப் பின்னால் எப்போதும் உறுதுணையாக நிற்கும் தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது வெற்றிக்குப் பின்னால் எப்போதும் உறுதுணையாக நிற்கும் தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
rajini latha

அன்பாலே என்னை மாத்தினாங்க; லதாவை கண்கலங்க வைத்த ரஜினி

திரையுலகில் தனித்துவமான ஆளுமையாக ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது வாழ்க்கையின் பல ஏற்றத்தாழ்வுகளில் உறுதுணையாகப் பயணித்தவர் அவரது மனைவி லதா ரஜினிகாந்த். இவர்களது காதல் கதை, எத்தனையோ ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

Advertisment

ரஜினிகாந்த் 1980-களில் முன்னணி நடிகராக இருந்தபோது, ஒரு கல்லூரி இதழுக்காக அவரைப் பேட்டி எடுக்கச் சென்றவர் லதா. அப்போது அவர் எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். முதல் சந்திப்பிலேயே, லதாவின் தெளிவான பேச்சு ரஜினியைக் கவர்ந்தது. இந்தப் பேட்டி, இருவருக்கும் இடையே ஒரு நட்பைத் தொடங்கி வைத்தது. பேட்டியின் முடிவில், ரஜினி லதாவிடம் தனது காதலைத் தெரிவித்தார். ரஜினியின் வெளிப்படையான குணமும், எளிமையும் லதாவைக் கவர்ந்தது. ஆனால், உடனடியாக பதில் சொல்லாமல், லதா தனது பெற்றோரின் ஒப்புதலைப் பெற அவகாசம் கேட்டார்.

லதாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த பிறகு, இருவரின் திருமணமும் 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ரஜினி உச்ச நட்சத்திரமாக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு, லதா ரஜினிகாந்த் திரைத்துறையில் இருந்து விலகி, குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என 2 மகள்கள் உள்ளனர்.

ரஜினிகாந்தின் வாழ்க்கையில் லதா ரஜினிகாந்தின் பங்கு மகத்தானது. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கொடுத்த அழுத்தம், உடல்நலக் குறைபாடுகள், ஆன்மீகத் தேடல்கள் என ரஜினியின் வாழ்க்கைப் பயணத்தில் லதா உறுதுணையாக நின்றார்.

Advertisment
Advertisements

ரஜினிகாந்த் படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், அவர் சந்தித்த தனிப்பட்ட சவால்கள், வெற்றிகள் என அனைத்திலும் லதா அவருக்கு துணையாக இருந்தார். அதேபோல, 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டின் போது, லதா அவருக்கு பக்கபலமாக இருந்தார். ரஜினி வெளிநாட்டில் சிகிச்சை பெற்றபோது, அவர் மீண்டும் ஆரோக்கியமாகத் திரும்பியதற்கு லதாவின் ஆதரவு முக்கிய காரணம் என்று ரஜினிகாந்தே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தனது மனைவி லதா குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிகரெட், அசைவம், மது ஆகிய மூன்றையும் அளவுக்கதிகமாக பயன்படுத்தியவர்கள் எல்லாம் 60 வயதை தாண்டியது இல்லை. நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். காலையிலேயே அசைவம்தான் சாப்பிடுவேன். ஏகப்பட்ட சிகரெட்டுகள் பிடிப்பேன். ஆனால் அவற்றிலிருந்து எல்லாம் நான் வெளியே வந்ததற்கு முக்கிய காரணம் மனைவி லதாதான். அவர் வந்துதான் என் மீது அளவுக்கதிகமான அன்பை செலுத்தி என்னை அந்தப் பழக்கங்களிலிருந்து அழைத்து வந்தார். மருத்துவர்களிடம் என்னை செல்ல வைத்து; என்னை முழுக்க முழுக்க ஒரு ஒழுக்கத்துக்குள் கொண்டுவந்தது லதாதான்" என்றார். அவரது இந்தப் பேச்சை கேட்ட லதா கண் கலங்கினார்.

சாதாரண மனிதனாக இருந்து, சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ள ரஜினிகாந்த், தனது வெற்றிக்குக் காரணம் தனது மனைவிதான் என்று பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசியது, பலருக்கும் ஒரு உத்வேகமான செய்தியாக அமைந்துள்ளது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: