விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
Advertisment
மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார்.
Advertisment
Advertisements
அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியலில், ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி நடித்தது, நந்தினிக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
விக்ரம் படத்தில் மைனா, விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
மேலும் சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் கார்த்தியின் அண்ணியாக நடித்து அசத்தினார்.
தற்போது மைனா, ரியாலிட்டி ஷோ, யூடியூப், சினிமா என பிஸியாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.
மைனா நந்தினி கலர்ஃபுல் சல்வார் கலெக்ஷன்ஸ் இங்கே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“