Advertisment

6 மணி நேரம் பியூட்டி பார்லர்.. ஆளே மாறிப்போன மைனா.. யோகேஷ்.. அப்படி என்ன பண்ணாங்க தெரியுமா?

மைனாவும், யோகேஷூம் மாலை 3 மணிக்கு பியூட்டி பார்லருக்கு சென்று, இரவு 9 மணி வரைக்கும் அங்கே நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து’ அதை மைனா விங்ஸ் யூடியூப் சேனலில் போட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
actress myna nandhini

Myna nandhini beauty parlor youtube video went viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

Advertisment

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.

இப்போது மைனா தனது யூடியூப் சேனலில் புதிதாக பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில்’ முடியை கொஞ்சம் கலரிங் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு பார்லர் யோசிச்சு வச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி யோகி, ஃபிரியா இருக்கானு கேட்டுக்கலாம்னு அவரையும் கூப்பிடுகிறார். பிறகு, யோகி இன்னைக்கு என்னம்மா பண்ண போறோம் என கேட்க, அதுக்கு மைனா இன்னைக்கு நீ ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கிற ஹேர் கட், ஹேர் கலர் பண்ண போறோம்னு சொல்ல, யோகேஷ் உடனே சந்தோஷமாகி விடுகிறார்.

இருவரும் சேர்ந்து ஒரு பெரிய பியூட்டி பார்லருக்கு சென்று, அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் வழக்கம்போல தங்கள் அலப்பறைகளை காட்டினர்.

பிறகு இருவரும் சீட்டில் உட்கார’ க்ரூமிங் ஆர்டிஸ்ட்’ மைனாவிடம் ஆங்கிலத்தில் பேச’ அவரும் ஏதோ அரைகுறை ஆங்கிலத்தில் விசாரிக்க’ யோகேஷ் மைனாவை கலாய்த்து தள்ளுகிறார்.

மைனா’ அவர்களிடம் ஒரு மாடல் போட்டோவை காட்டி’ இதே மாதிரி யோகேஷ் இருக்கனும் சொல்கிறார்.

பிறகு க்ரூமிங் ஆர்டிஸ்ட்’ ஏதோ சிற்பம் செதுக்குவது போல’ யோகேஷூம், மைனாவுக்கு கூந்தலை பார்ட் பார்ட் ஆக பிரித்து’ ஏன்னென்னமோ  செய்கின்றனர்.

யோகேஷூக்கு கொஞ்சம் முடி என்பதால் அவருக்கு சீக்கிரமாகவே எல்லா அலங்காரங்களும் முடிந்து ஏதோ ஹாலிவுட் மாடல் போல ஆகிவிட்டார்.

பிறகு மைனாவுக்கு ஹேர் வாஷ் செய்து, க்ரூமிங் எல்லாம் செய்த பிறகு’ ஆளை பார்க்க ஃபிரெஷாக புது லுக்கில் இருக்கிறார். இப்படி மைனாவும், யோகேஷூம் மாலை 3 மணிக்கு பியூட்டி பார்லருக்கு சென்று, இரவு 9 மணி வரைக்கும் அங்கே நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து’ அதை மைனா விங்ஸ் யூடியூப் சேனலில் போட்டுள்ளனர். இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment