New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/myna-nandhu.jpg)
Myna Nandhini birthday shopping youtube video went viral on internet
மைனா’ தனது கணவர் யோகி உடன் பட்டுப் புடவை வாங்க ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.
Myna Nandhini birthday shopping youtube video went viral on internet
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.
இந்நிலையில் மைனா’ தனது கணவர் யோகி உடன் பட்டுப் புடவை வாங்க ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.
வீடியோ ஆரம்பிக்கும்போது யோகி பேச ஆரம்பிக்க, அதற்குள் மைனா’ என்ன நான் கேட்பேன் தெரியாதா? அடுத்த மாசம் பிறந்தநாள் புரியாதா என பாடி’ வா போயிட்டு வரலாம், எனக்கு சர்பிரைஸ் வேணும்பா. வீட்டுல எல்லாரும் நான் புடவைய கட்டமாட்றேன். புடவை கட்டணும் சொல்றாங்க. நார்மலா புடவை கட்டுனா நல்லா இருக்காது. பட்டு புடவை கட்டுனா தானே நல்லா இருக்கும். காஞ்சிபுரத்துல மொத்த விலைக்கு நல்லா கிடைக்கும் சொன்னாங்க.
நான் ஒருத்தர்கிட்ட விசாரிச்சு வச்சுருக்கேன். அவர் நமக்கு தெரிஞ்ச இடம் இருக்கு. வீடுதான்னு சொன்னாரு. வீட்டுல போய் வாங்கினா, விலை கம்மியா கிடைக்கும் சொல்லி யோகியும், மைனாவும் பட்டு புடவை வாங்க’ காரில் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சென்றனர்.
ஒருவழியாக காஞ்சிபுரம் லக்ஷ்யா சில்க்ஸ் கடைக்குள் மைனாவும், யோகியும் நுழைந்தனர். அங்கு போன உடனே மைனா’ அங்கு அமர்ந்து சுற்றி புடவைகளை எடுத்து போட்டு’ அங்குள்ள அண்ணனிடம் பேச ஆரம்பித்து விட்டார்.
காஞ்சிபுரத்துல நிறைய கடைக்கு வந்துருக்கோம். ஆனா இந்த மாதிரி ஹோல் சேல் கடைக்கு இதுதான் முதல் தடவையா வர்றோம். ஏன்னா இங்க ரேட் கம்மியா இருக்கும் சொன்னாங்க.. என்ன ரேஞ்சுல இருந்து புடவை விலை ஆரம்பிக்குது என மைனா கேட்க, உடனே அந்த அண்ணன்’ நம்மகிட்ட 1500ல இருந்து 30000 வரைக்கும், ஒரு லட்சம், இரண்டு லட்ச ரூபாய்க்கு கூட புடவை கிடைக்கும் என சொல்கிறார்.
பிறகு 1500 ரூபாய் மதிப்புள்ள புடவையில, கிட்டத்தட்ட 800 கலெக்ஷ்னஸ் இருக்கு. இங்க செமி சில்க், பியூர் சில்க் ரெண்டு கேட்டகிரி இருக்கு. 1500 லருந்து 6000 ரூபாய் வரைக்கும் செமி சில்க். 6,500ல இருந்து 1 லட்சம் வரைக்கும் பியூர் சில்க் என அங்கிருக்கும் புடவைகளை மைனாவிடம் காட்டுகிறார்.
புடவைகளை பார்த்து மெய்மறந்து போன மைனா, மக்களே இங்க எல்லா கலெக்ஷனுமே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கு. நீங்க நேருல வந்தா இன்னுமே அந்த அனுபவம் உங்களுக்கு நல்லா இருக்கும். முதல்ல 1500 ரூபாய்ல புடவை காமிச்சாங்க. அது சிங்கிள், காண்டிரஸ்ட் கலர் இரண்டுலயும் இருக்குனு சொல்கிறார். பிறகு, 2000 ரூபாய் புடவை ஒன்னு பார்த்ததும் அது பிடித்து போன உடனே மைனா எடுத்து விட்டார்.
பிறகு புடவை எப்படி மெயிண்டேன் பண்ணனும் என கடைக்காரரிடம் மைனா கேட்க, உடனே அவர்’ பட்டு புடவை துவைக்க கூடாது. டிரை வாஷ், ஷாம்பூ வாஷ் தான் பண்ணனும். சாயம் போகாது. நூலும் வெளியே வராது என சொல்கிறார்.
இப்படி செமி சில்க் புடவைகளை பார்த்து முடித்த பிறகு மைனா அடுத்து பியூர் சில்க் புடவைகளை பார்க்கிறார். ஒரு பிங்க் நிற புடவைய பார்த்து நல்லா இருக்கா என யோகியிடம் கேட்க, உடனே யோகி’ நீ ஒழுங்கா கட்டிக் காட்டு என சொல்ல, மைனா உடனே புடவையை மேலே போர்த்தி எப்படி இருக்கு என பார்க்கிறார்.
பிறகு ஒரு நல்ல அடர் பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவை பாத்ததும் பிடித்து போக அதையும் பேக் பண்ண சொல்கிறார்.
அடுத்து 12, 500 ரூபாயிலருந்து ஆரம்பிக்கும் பிரைடல் கலெக்ஷனை புடவைகளை மைனா பார்க்கிறார். அப்போது கோர்வை புடவை எனும் கலெக்ஷ்னை கடைக்காரர் காட்டுகிறார். கோர்வை புடவைனா, புடவை ஒருத்தங்க பண்ணுவாங்க, அதேபோல பார்டர் இன்னொருத்தர் பண்ணுவாங்க, பள்ளு வேற ஒருத்தங்க பண்ணுவாங்க. இந்த மூனையும் ஒன்னா சேர்த்து தான் கோர்வை புடவை. இது காஞ்சிபுரம் ஸ்பெஷல் என சொல்கிறார்.
பிறகு மைனா தான் செலக்ட் செய்த எல்லா புடவைகளையும் எடுத்து டிரையல் பார்க்கிறார். ஒருவழியாக கடையின் வாட்ஸ் ஆப் நம்பர், வெப்சைட் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து, உங்களுக்கு பிடிச்சா நீங்களும் வாங்குங்க என அங்கிருந்து யோகியும், மைனாவும் கிளம்பி சென்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.