சொந்த வீடு இல்லைங்க... ஆனா எல்லாமே எங்களுக்கு பிடிச்ச பொருள்கள்! - மைனா நந்தினி வைரல் வீடியோ!

Myna Nandhini Latest Funny Viral Youtube Video Tamil News 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று, தற்போது எந்த காணொளி 16-வது ட்ரெண்டிங் இடத்தில் உள்ளது.

Myna Nandhini Latest Funny Viral Youtube Video Tamil News 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று, தற்போது எந்த காணொளி 16-வது ட்ரெண்டிங் இடத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
Myna Nandhini Latest Funny Viral Youtube Video Tamil News

Myna Nandhini Latest Funny Viral Youtube Video Tamil News

Myna Nandhini Latest Funny  Viral Youtube Video Tamil News : மைனா நந்தினி புது வீட்டிற்கு போகிறார் என்றதும், பலரும் புது வீடு வாங்கி செல்கிறார்கள் என்று தவறாக எண்ணிவிட்டார்களாம். உண்மையில் இவர்கள் புது வீட்டை வாங்கவில்லை. வாடகை வீட்டிற்குத்தான் செல்ல உள்ளார்கள். பார்த்ததுமே மிகவும் பிடித்துப் போன இந்த வீட்டில் எப்படியாவது குடியேறிவிட வேண்டும் என்று நினைத்தவர்கள், ஒருவழியாகப் பால் காய்த்துவிட்டனர். இந்தப் புதிய வீட்டிற்காக இவர்கள் என்னென்ன பொருள்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதை காணொளியாகப் பதிவு செய்து தங்களின் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கின்றனர்.

Advertisment

முதலில் லிவிங் ஏரியாவில் என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொண்டனர். மைனா நந்தினி மற்றும் யோகேஷ் இருவரும் இணைந்து வாங்கிய விருதுகள் மற்றும் நந்தினி அவர் சகோதரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட ஃபிரேம் ஆகியவற்றைக் காண்பித்தனர். பிறகு வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன் வரலாறுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

மைனா நந்தினியின் உழைப்பில் முதல் முதலாக வாங்கிய டிவி பற்றிய வரலாற்றையும் பகிர்ந்துகொண்டனர் நந்தினி ஜோடி. தன் நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் செல்லும்போது, அங்கிருக்கும் ரெக்லைனர்ஸ் பார்த்து ஏக்கமாக இருக்குமாம் யோகேஷுக்கு. ஆனால், இப்போது தன் வீட்டிலும் அட்வான்ஸ்டு ரெக்லைனர்ஸ் இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார் யோகி!

இதையடுத்து அவர்களின் படுக்கை அறைக்கு நம்மை அழைத்துச் சென்றனர். அங்கு, முந்தைய வீட்டில் இரண்டு ஆண்டுகளாக பரண்மீது கிடந்த பொருள்களை எல்லாம் இந்த வீட்டில் எப்படி அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டி மகிழ்ந்தனர். அடுத்தது, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் மரத்தாலான மின்விசிறியை சோதனை செய்து காண்பித்தனர்.

Advertisment
Advertisements

அடுத்ததாக டைனிங் அறை, பூஜை அறை, சமையல் அறை என எல்லாவற்றுக்கும் ஒரு விசிட் அடித்துக் காட்டினார்கள். அதிலும், மைனா நந்தினி அடம்பிடித்து வாங்கிய கேஸ் ஸ்டவ் பற்றி மிகவும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அடுத்ததாக ஸ்டோர் ரூம், பாத்ரூம் என அனைத்தையும் சுற்றிக்காட்டி, காணொளியை நிறைவு செய்தனர். 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று, தற்போது எந்த காணொளி 16-வது ட்ரெண்டிங் இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Myna Nandhini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: