Myna Nandhini Latest Youtube Viral Video Surprise Tamil News : மைனா நந்தினி ஆன்ஸ்க்ரீனில் மட்டுமல்ல ஆஃப்ஸ்க்ரீனிலும் நான்-ஸ்டாப் குறும்பு செய்பவர். தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் ஆரம்பித்து அதில் ஏராளமான நகைச்சுவை கலந்த காணொளிகளைப் பகிர்ந்து, மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நந்தினியுடன் இணைந்து அவருடைய கணவர் யோகேஷும் ஏராளமான கன்டென்ட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் அவர்கள் கொஞ்சம் லேட்டாக கொண்டாடிய திருமண நாள் சர்ப்ரைஸ் காணொளி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மதுரையில் 13 நாள்கள் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பும் நந்தினிக்காக விமான நிலையம் சென்று தன் மனைவிக்காக காத்திருக்கும் வேளையில் Vlog காணொலிக்காக ஷூட் செய்யத் தொடங்கினார் யோகேஷ். “13 கழித்து என் பொண்டாட்டி வருகிறார். 4 நாள்கள் எங்களுடன் இருந்துவிட்டு, பிறகு ரியாலிட்டி ஷோ ஷூட், அதனைத் தொடர்ந்து திரைப்பட ஷூட் என பிசியாகி விடுவார். நேற்றுதான் எங்களுடைய இரண்டாவது திருமண நாள் முடிந்தது. அதற்கு அவருடன் இருக்க முடியவில்லை. அதனால், ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்” என்றபடி நந்தினி வருகிறாரா என்று வழி மேல் விழி வைத்தபடி இருந்தார் யோகேஷ்.
தன் கணவரைப் பார்த்ததும் தன்னுடைய வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார் நந்தினி. “12 நாட்கள் கழித்து என் பொண்டாட்டி ஊருக்கு வந்துட்டா” என்றபடி காதல் வழிய வழிய தன் மனைவியை ரசித்துக்கொண்டிருந்தாள் யோகேஷ். பார்த்தது போதும், பசிக்குது சாப்பிட போகலாம் என்று நந்தினி கூற, ஜெட் வேகத்தில் கார் ஹோட்டலை நோக்கிச் சென்றது.
ஹோட்டலில் வினிகரில் ஊறுகாய் ஊறுவதை நந்தினி நாக்கில் எச்சில் ஊற ஊற பார்த்துக்கொண்டிருந்ததைப் படமாக்கிக் காட்டினார் கணவர். ‘என்ன ஒரு லுக்கு’.. சப்ஸ்க்ரைபர்ஸ் சார்பாக சாசேஜ், பூரி, கிழங்கு என அனைத்தையும் நந்தினியை சாப்பிட்டுவிட்டு தங்களின் மகன் துருவை பார்க்கப் பறந்தனர். அப்போது ‘என் உயிர் துருவ்’ என்று நந்தினி கூற, ‘அப்போ நான் பாசமில்லையா… உயிர் இல்லையா…’ என்று அப்பாவியாக கணவர் வழிய, இருவருக்குமிடையேயான ரொமான்ஸ் முடியல.
பிறகு துருவுடன் சிறிது நேரம் விளையாடிய பிறகு, நந்தினிக்காக வாங்கி வைத்திருந்த அழகிய செயினை பரிசளித்தார் யோகேஷ். கேட்கவே வேண்டாம், சந்தோஷத்தில் துள்ளி குதித்தார் நந்தினி. அதுமட்டுமா, அந்த செயினை யோகேஷ் போட்டுவிட, டபுள் ட்ரீட்தான். அதுசரி நந்தினி.. உங்கள் பரிசு எங்கே?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil