அந்த எடிட்டிங்தான் மிகப்பெரிய ப்ளஸ் - மைனா நந்தினி யூடியூப் சேனல் ரிவ்யூ!
Myna Nandhini Myna Wings Youtube Channel Review நான்கு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருக்கும் இவருடைய சேனலில் ஏராளமா வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
Myna Nandhini Myna Wings Youtube Channel Review Tamil : 'சரவணன் மீனாட்சி' தொடரின் மைனா கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நந்தினி. மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் பரீட்சையம். நகைச்சுவை, குணச்சித்திரம் என சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் தன் திறமையை வெளிப்படுத்தி வருபவர், தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனலையும் வைத்திருக்கிறார்.
Advertisment
'மைனா விங்ஸ் (Myna Wings)' என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சேனலில், பெரும்பாலும் அழகுக் குறிப்புகள்தான் இருக்கிறது. அதேபோல Vlog வீடியோக்களும் ஏராளாமாகா அப்லோட் செய்யப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருக்கும் இவருடைய சேனலில் ஏராளமா வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
அதில் கிச்சன் டூர், ஃப்ரிட்ஜ் டூர், ஹோம் டூர் உள்ளிட்டவை அடங்கும். அதுமட்டுமின்றி தன் குழந்தையின் முதல் புகைப்படம், நந்தினி மற்றும் அவருடைய கணவரின் திருமண காணொளி, வித்தியாச போட்டோஷூட் உள்ளிட்டவையும் மில்லியன் வியூஸ்களை கடந்து செல்கின்றன.
பளீச்சென வெள்ளையாக மாறுவது எப்படி என்கிற விடியோதான் இவருடைய சேனலில் அதிக வியூஸ் பெட்ரா காணொளி. சுமார் 1.5 மில்லியன் வியூஸ்களை கடந்து இன்னும் அதிக நபர்களோ பார்க்கப்படுகிறது. மேலும், ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி, பிக் பாஸ் நிஷாவுடன் ஒருநாள், ஷாப்பிங் Vlog உள்ளிட்ட ஏராளமான சுவாரசிய வீடியோக்களும் இவருடைய சேனலில் உள்ளன.
இவருடைய வீடியோக்களில் ஹயிலைட்டான விஷயமே நகைச்சுவையான எடிட்டிங்தான். காணொளியில் நடுவில் ஆங்காங்கே காமெடி வசனங்களை சேர்த்திருப்பது காணியின் சுவாரசியத்தை அதிகரிக்கிறது. எப்போது யூடியூபில் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, விரையில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்றுவிடுவார் என்பதில் சந்தேகமேயில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil