Myna Nandhini Skincare Beauty Tips Tamil News : சருமத்தை பளிச்சென மாற்றும் சில எளிய மற்றும் அவசிய வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறார் மைனா நந்தினி.
Advertisment
"சரும பராமரிப்பு என்றாலே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று வெளிப்புற அழகுப் பொருள்கள் மற்றொன்று நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள். ஏராளமான அழகு சாதனப் பொருள்கள் மார்க்கெட்டில் உள்ளன. அவற்றில் எதை உபயோகிக்கப் போகிறீர்கள் என்பதில் கவனம் தேவை.
கொஞ்சம் நாளுக்கு முன்பு, பஞ்சாரஸ் எனும் அழகு சாதனப் பொருள்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. நானும் அவற்றையெல்லாம் உபயோகித்துப் பார்த்தேன். ஆனால், அதனால் எந்தவித பயனும் இல்லை. எனவே, உங்கள் சருமத்திற்கு எது சிறந்தது என்பதைப் பார்த்துப்பார்த்துத் தேர்வு செய்யுங்கள்.
அடுத்தது, சன் ஸ்க்ரீன் லோஷன் நிச்சயம் உபயோகிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அவற்றை உபயோகிப்பது தவறல்ல. ஆனால், லோஷன் போட்டுவிட்ட காரணத்தினால் நீண்ட நேரம் வெய்யிலில் நிற்கக் கூடாது. அது மேலும் சருமத்தைக் கறுப்பாக்கிவிடும்.
வெய்யிலில் வெளியே சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தைக் கழுவக் கூடாது. வீட்டிற்கு வந்ததும் 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பிறகு முகத்தைக் கழுவுவதுதான் சிறந்தது. அதேபோல வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் முகத்தில் மஞ்சள் உபயோகிக்கலாம். சிலர் தினமும் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. தினமும் பயன்படுத்தினால் அதுவும் சருமத்தைக் கறுப்பாக்கிவிடும்.
வெள்ளையாக மாறவேண்டும் என்று சிலர் தினமும் கேரட் ஜூஸ் குடிப்பார்கள். அப்படிச் செய்யக்கூடாது. அது பைல்ஸ் போன்ற பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஒருநாள் கேரட் ஜூஸ், மற்றொரு நாள் பீட்ருட் ஜூஸ், அடுத்த நாள் தக்காளி உ என வெவ்வேறு காய் மற்றும் பழ ஜூஸ்களை குடிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil