கேக், செயின், பிரபலங்கள்.. – ட்ரெண்டிங்கில் மைனா நந்தினி லாக்டவுன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Myna Nandhini Trending Youtube Video சூப்பர் சிங்கர் திவாகர், படவா கோபி, ராஜ்மோகன், தொகுப்பாளினி ஜாக்குலின் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.

Myna Nandhini Trending Youtube Video Myna Wings Tamil
Myna Nandhini Trending Youtube Video Myna Wings Tamil

Myna Nandhini Trending Youtube Video Myna Wings Tamil : தன் கலகலப்பான டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்தினி. மைனா நந்தினி என்றால்தான் பலருக்கும் தெரியும். இவர், தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலை தொடங்கி, அதில் மக்களுக்குப் பயனுள்ள பல டிப்ஸ்களையும் அவ்வப்போது ஃபன் கன்டென்ட்டுகளையும் பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில், சமீபத்தில் இவர் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு, ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படி என்ன அந்த வீடியோவில் ஸ்பெஷல்?

நந்தினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்தான் அந்த காணொளி முழுக்க. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என எல்லாமே கலந்து இருந்தன. லாக்டவுன் காலகட்டம் என்பதால் தன் மனைவிக்காக பிரத்தியேகமாக கேக் ஒன்றைத் தயார் செய்தார் யோகேஸ்வரன். அதாவது அவர் செய்யச்சொல்லி யோகேஸ்வரனின் தங்கை செய்தார். இறுதிக்கட்ட கேக் பார்ப்பதற்கு மாட்டுச் சாணம்போல்தான் இருந்தது. அப்படி என்று நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர்களே பல கவுன்ட்டர்களை அள்ளிவீசினர்.

கேக் தயார் ஆனதும், தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒன்று திரட்டி, கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். புத்தாடை கொடுத்தது, கேக் கட் செய்து ஊட்டுவது என ஃபார்மாலிட்டிகள் நிறைவடைந்தபின், டிவி ஆன் செய்யப்பட்டு அதில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பிளே செய்தனர். தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் முதல் மாகாபா ஆனந்த்,  கலக்கப் போவது யாரு புகழ் அசார், வினோத், சரத், டிஸ்கே, குரேஷி, பாடகி ரம்யா, பாடகர் வேல்முருகன், சூப்பர் சிங்கர் திவாகர், படவா கோபி, ராஜ்மோகன், தொகுப்பாளினி ஜாக்குலின் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் நந்தினியின் ரியாக்ஷனையும் சேர்த்து யூடியூபில் அப்லோட் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, யோகேஸ்வரன் தன் மனைவிக்காக வாங்கிய தங்க செயினை பரிசளித்தார். அதனை வெட்கத்தோடு (உண்மையாகவே) திறந்து, அணிந்துகொண்டார் நந்தினி. இல்லை இல்லை யோகேஸ்வரன் அணிவித்தார். பிறகு சாக்லேட்டுகள், பெர்ஃப்யும் ஆகியவை அன்பளிப்பாக வந்தன. ஏதோ ஒரு கிஃப்ட் தன் தம்பி தரப்போகிறார் என்று அலறிய நந்தினிக்கு கியூட்டான’ ஹக்’ மட்டுமே கிடைத்தது. அதற்குப் பின்னணி பாடல் வேறு! இப்படி சந்தோஷங்கள் நிறைந்த காணொளியாக இருந்தது இந்த கொண்டாட்ட வீடியோ.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Myna nandhini trending youtube video myna wings tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com