scorecardresearch

டிரெயின் கம்பார்ட்மென்டை மினி ஹோட்டலாக மாற்றிய மைனா நந்தினி.. எங்க போனாங்க தெரியுமா?

என்னோட லைஃப் பக்கெட் லிஸ்ட்ல துருவ இங்கெல்லாம் கூட்டிட்டு போனும். இப்படித்தான் கூட்டிட்டு போனும்னு ஆசை இருக்கு- மைனா நந்தினி!

Myna Nandhini
Myna Nandhini birthday shopping youtube video went viral on internet

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.

இப்போது மைனா தனது யூடியூப் சேனலில் புதிதாக பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோ ஆரம்பிக்கும் போது பேசும் மைனா, என்னோட லைஃப் பக்கெட் லிஸ்ட்ல துருவ இங்கெல்லாம் கூட்டிட்டு போனும். இப்படித்தான் கூட்டிட்டு போனும்னு ஆசை இருக்கு. சின்ன வயசுல இருந்து டிரெயின்ல போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் லாங் ட்ரீப்லாம் ஜாலியா இருக்கும்.

இன்னைக்கு நாங்க துருவுக்கு ரெண்டாவது மொட்டை போடறதுக்கு திருச்செந்தூர் போறோம். அதுவும் டிரெயின்ல தான் போறோம். ரொம்ப நாள் கழிச்சு டிரெயின்ல போறது ஹெப்பியா இருக்கு. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் எனக்கு ரொம்ப இஷ்டம். வருஷா வருஷம் அந்த கோயிலுக்கு தான் ஆடுறோம். அப்படியே திருச்செந்தூர் கோயிலுக்கும் போறோம். இன்னைக்கு நைட் டிரெயின் ஏறி, நாளைக்கு காலையில மொட்டை அடிக்குறோம். அப்புறமா அங்க இருந்து நைட் டிரெயின் ஏறி வரப்போறோம்.

எனக்கு ரொம்ப நாள் ஆசை. சின்ன வயசுல என் தம்பி பாலு குட்டியா இருக்கும்போது, ரெண்டு டிரெயின் ஓட பர்த்ல சேலைய கட்டி, அதுல உட்கார வச்சு ஆடிட்டே இருப்போம். ஜாலியா இருக்கும் என மைனா வீடியோவை காட்டுகிறார்.

யோகி, மைனா, துருவ், மைனா அப்பா, பிரபு மற்றும் அவர்களது சில நண்பர்கள்’ சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து டிரெயினை பிடித்து, ஏசி கம்பார்ட்மென்டில் அமர்ந்து ஒருவழியாக செட்டிலாகினர். தட்கலில் டிக்கெட் புக் செய்ஞ்சதால, 4 பேருக்கு ஒரு இடத்துலயும், மூனு பேருக்கு வேற இட த்தலயும் இருக்கு, டிடிஆர்’கிட்ட கேட்டுருக்கோம். கொடுப்பாங்கலானு தெரியல என யோகி சொல்ல, ஒவ்வொருத்தர் முகத்தையும் காட்டுகிறார்.

பிறகு பேசிய மைனா, முத்தாரம்மன் கோயிலுக்கு முதல்ல டிரெயின்ல தான் போயிட்டு இருந்தோம். கடைசி ரெண்டு வருஷமா தான், பிளைட்ல போறோம். இப்போ துருவ் முதல் தடவ முத்தாரம்மன் கோயிலுக்கு வரான். அதுவும் டிரெயின்ல என சந்தோஷத்தில் சிரிக்கிறார்.

போகபோக துருவ் தன் சேட்டையை ஆரம்பிக்க, கம்பார்ட்மென்ட் முழுவதும் ஒரே அலப்பறையாக இருக்கிறது. பிறகு ஒட்டுமொத்த கூட்டமும், தட்டை கையில் எடுத்து, சாப்பிட ரெடி ஆகிவிட்டனர். ஏற்கெனவே வீட்டிலிருந்து கொண்டு வந்த சப்பாத்தி, தக்காளித் தொக்கை அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு, கொஞ்ச நேரத்தில் கம்பார்ட்மென்டை மினி ரெஸ்டாரண்டாக மாற்றிவிட்டனர்.

பிறகு மீண்டும் டிரெயின்ல வந்த சாப்பாட்டை வாங்கிய யோகி, அதைப் பார்த்து மிகவும் அப்செட்டாகி உண்மையிலேயே இது பரோட்டாவ தெரியல, நேத்து செய்ஞ்சது நினைக்கிறேன். தயவுசெய்ஞ்சு வீட்டுல இருந்து சமைச்சு எடுத்துட்டு வாங்க. அதுதான் உங்களுக்கு நல்லது என பரிதாபத்துடன் கூறுகிறார்.

மைனா ஏற்கெனவே வீட்டிலிருந்தபோது சொன்னமாதிரி, இரண்டு பர்துக்கும் நடுவில் தொட்டில் கட்டி, அதில் துருவை தாலாட்டு பாடி தூங்க வைத்துவிட்டார். பிறகு அனைவரும் தூங்கி எழுவும், விடிந்து திருநெல்வேலி வந்துவிட்டது.

பிறகு அங்கிருந்து வாடகைக்கு கார் எடுத்து திருச்செந்தூர் சென்று அங்கு ரூம் எடுத்து ரிஃபிரெஷ் ஆகி, துருவுக்கு மொட்டை போட போறோம் . அது அடுத்த வீடியோல பாருங்க என யோகி சொல்ல, இப்போ துருவ் முடியோட ஸ்மார்ட்டா இருக்கான், அடுத்து மொட்டை போட்டு, இதைவிட ஸ்மார்ட்டா இருப்பான் என மைனா வீடியோவை முடிக்கிறார்.

துருவுக்கு மொட்டை போடுவதை நாம் அடுத்த வீடியோவில் பார்க்கலாம்! அதுவரை நீங்களும் வெயிட் பண்ணுங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Myna nandhini went kulasekarapattinam temple through train video viral