ஸ்டார் ஹோட்டல், 9 லட்சம் வியூஸ், கோபிநாத் என்ட்ரி – மைனா நந்தினி ட்ரெண்டிங் யூடியூப் வீடியோ!

Myna Nandhini Youtube Channel Trending Video Tamil News எங்கள் நீண்ட நாள் ஆசை, எங்கள் மகனால் நிறைவேறியுள்ளது

Myna Nandhini Youtube Channel Trending Video Tamil News
Myna Nandhini Youtube Channel Trending Video Tamil News

Myna Nandhini Youtube Channel Trending Video Tamil News : சின்னதிரையிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி எப்போதுமே துருதுருவென இருக்கும் ஜோடி என்றால் அது நிச்சயம் மைனா நந்தினி – யோகேஸ்வரன் ஜோடிதான். தங்களுக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வீடியோக்கள் பெரும்பாலும் ட்ரெண்டிங் லிஸ்டில் வந்துவிடும். அந்த அளவிற்கு அவர்களின் கன்டென்ட் முழுக்க முழுக்க மக்களை என்டெர்டெயின் செய்யும் வகையில் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் தங்களின் மகன் துருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பதிவு செய்து அப்லோட் செய்தனர்.  அந்த காணொளி 9 லட்சம் வியூஸ்களை கடந்து டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சென்னையின் ஓர் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துள்ளனர் மைனா – யோகி ஜோடி. பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தை மேலும் அழகாகியது குட்டி துருவனின் கியூட் புகைப்படங்கள். யூடியூப் பிரபலம் ராஜ்மோகன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மருமகனே என்றபடி மண்மணம் மாறாத அன்பை வெளிப்படுத்தினார். இவரைத் தொடர்ந்து, குரேஷி, சரத் என விஜய் டிவி பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்தனர்.

“யோகியே எங்களுக்கு ஒரு குழந்தை. அவனுடைய குழந்தைக்குப் பிறந்தநாள் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் கண் முன்னே வளரும் துருவன் எங்கள் எல்லோருடைய செல்லக்குட்டி” என்றபடி பூரித்தனர் கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் அவருடைய மனைவி. பிறகு அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த துருவனின் என்ட்ரி. அழகிய காரில், ஒய்யாரமாக அமர்ந்தபடி பலரின் அன்பைப் பெறுவதற்காக ஆவலோடு அந்த அழகிய அறைக்குள் வந்தார்.

அப்பாவும் மகனும் ஒரேபோன்ற உடை அணிந்துகொள்ள, ‘சரி அதே நிறத்திலாவது உடை அணிந்துகொள்கிறேன்’ என்பதுபோல் மைனா நந்தினி அழகிய கவுன் அணிந்து மிளிர்ந்தார். “எங்கள் குடும்பத்திலேயே ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடப்படும் முதல் நிகழ்வு இது. எங்கள் நீண்ட நாள் ஆசை, எங்கள் மகனால் நிறைவேறியுள்ளது” என்றுகூறி சிறிதளவு எமோஷனலான மைனா நந்தினி, உடனே படபடவென பேசத்தொடங்கினார். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அறையே ஆரவாரமாகக் காட்சியளித்தது.

கேக் கட்டிங், பரிசளிப்பு, தங்கள் நெருங்கிய நண்பன் பிரபு உருவாக்கிய ஸ்பெஷல் காணொளி என மிகவும் சிறப்பாக நகர்ந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினராக ‘நீயா நானா’ கோபிநாத் வருகை தந்திருந்தார். தன்னுடைய பாணியில் வாழ்த்திவிட்டு விடைபெற்றார். இவ்வாறு, மிகவும் பாசிடிவிடி நிறைந்த நிகழ்வாக மைனா நந்தினி மற்றும் யோகியின் இந்த ஸ்பெஷல் நிகழ்வு இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Myna nandhini youtube channel trending video tamil news

Next Story
சூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் டும் டும்… மணமக்களின் க்யூட் போட்டோஸ்!Vijay tv Tamil News: super singer malavika rajhesh vaidhya engagement viral pics
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com