New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/myna.jpg)
Myna Nandhini travelling to Dubai with her husband yogi photos viral
இன்ஸ்டாகிராமில் மைனா பகிர்ந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
Myna Nandhini travelling to Dubai with her husband yogi photos viral
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வர, நந்தினி சென்னைக்கு குடியேறினார். ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியல் தான். அதில் ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி அவர் நடித்தது அவருக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மைனா பகிர்ந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் மைனா’ தனது கணவர் யோகி உடன் துபாய் நாட்டுக்கு டூர் சென்ற போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார்.. இதோ அந்த போட்டோஸ்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.