3 பொருள்; 15 நிமிடம்... வாயில் பட்டதும் கரைந்து போகும் சூப்பரான மைசூர்பா ரெடி!

முதலில் நல்ல தரமான கடலை மாவை சல்லடையில் போட்டு நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். இதனால் மைசூர்பாக் செய்யும் போதும் மாவு கெட்டியாகாமல் இருக்கும்.

முதலில் நல்ல தரமான கடலை மாவை சல்லடையில் போட்டு நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். இதனால் மைசூர்பாக் செய்யும் போதும் மாவு கெட்டியாகாமல் இருக்கும்.

author-image
WebDesk
New Update
mysore pak

Mysore pak Recipe

தீபாவளி பண்டிகை வந்து விட்டது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பராம்பரியமான மைசூர் பாகு ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

இதற்கு வெறும் 3 பொருட்கள் மட்டும் போதும். 15 நிமிடங்களில் சுலபமாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு- 1 கப்

Advertisment
Advertisements

நெய், எண்ணெய்- தேவையான அளவு

சர்க்கரை- 3 கப்

செய்முறை

முதலில் நல்ல தரமான கடலை மாவை சல்லடையில் போட்டு நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். இதனால் மைசூர்பாகு செய்யும் போதும் மாவு கெட்டியாகாமல் இருக்கும்.

மைசூர்பாகு செய்யும் டிரேவில் நெய் அல்லது எண்ணெய் தடவி தயாராக வைக்கவும். உங்களிடம் டிரே இல்லை என்றால் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு தட்டை பயன்படுத்தலாம்.

இப்போது அடுப்பில் அடிகனமான கடாய் வைத்து அதில் 3 கப் சர்க்கரை சேர்க்கவும். நீங்கள் எந்த கப்பில் கடலை மாவு எடுத்தீர்களோ அதற்கு 3 கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

சர்க்கரை நன்கு கரைந்து பாகு ஒரு கம்பி பதத்துக்கு வர வேண்டும்.

இப்போது அடுப்பை லெள ஃபிளேமில் வைத்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாவு சேர்த்து கிளறி விட்டே இருக்கவும். மாவு கெட்டியாக விழுந்தால் கரண்டியால் அழுத்தி விடவும்.

மாவு, சர்க்கரை பாகுவுடன் நன்கு சேர்ந்து வரும் போது, எண்ணெய்யும், நெய்யும் சூடுபடுத்தி இதில் சேர்க்கவும்.

அதற்கு தனியே ஒரு கடாயில் ஒரு கப் எண்ணெய் (கடலை மாவு எடுத்த அதே கப்), அரை கப் நெய் சேர்க்கவும். உங்களுக்கு நெய் வேண்டாம் என்றால் எண்ணெய் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல எண்ணெய் வேண்டாம் என்றால், நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து எண்ணெய்யை நன்கு கிளறி விட்டே இருக்கவும்.

எண்ணெய் சூடானதும் அடுப்பை அணைக்காமல், அப்படியே கடாயில் இருந்து கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மைசூர் பாகுவில் சேர்க்கவும். மொத்தமாக சேர்க்கக் கூடாது.

எண்ணெய் சூடாக இருக்கும் போதே மைசூர் பாகுவில் சேர்க்க வேண்டும். அப்போது தான் மைசூர் பாகு நன்கு வெந்து கடலைமாவு வாசனை இல்லாமல் இருக்கும்.

இப்போது மைசூர் பாகு நன்கு பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடனே டிரேக்கு மாற்றவும். ஒரு கரண்டி வைத்து லேசாக மைசூர் பாகை சமப்படுத்தவும். அழுத்தக் கூடாது. கொஞ்சம் நேரம் ஆறியதும், பீஸ் போடலாம்.

இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Mangani Samayal யூடியூப் சேனலின் மைசூர் பாகு ரெசிபி வீடியோ பாருங்க

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: