ஆச்சர்யத்தின் உச்சம்! ஒரே பிரசவத்தில் 300 மில்லியன் குழந்தைகள்!

மனிதனுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாத மீன், ஒரு முறை முழுமையாய் வளர்ந்த ஒரு mola mola ஒரு படகின் மீது பாய்ந்து அதில் இருந்த...

லியோ

நாம் வாழ்கின்ற இந்த உலகம் பறந்து விரிந்து கிடக்கும் ஒரு மாபெரும் நிலம். 510 மில்லியன் km2 மேற்பரப்பையும் 6371கி.மி. என்ற பிரம்மாண்ட விட்டதையும் கொண்டது. இதுவரை 8.7 மில்லியன் உயிரினங்களுக்கு வாழ்விடமாக திகழும் இந்த பூமியில் பல அதிசய அமானுஷ்ய உயிரினங்களும் தோன்றி மறைந்துள்ளன. இன்று நாம் காணவிருக்கும் உயிரினமும் பல அமானுஷ்யங்களை கொண்டதே. மனிதன் தோன்றுவதற்கு சுமார் 524 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிவிட்ட ஒரு இனம். இன்றும் நாம் அன்றாடம் சுவைத்து மகிழும் ஒரு இனம். அதுவே மீன் இனம். Mola Mola அல்லது The Ocean Sun Fish என்று அழைக்கப்படும் ஒரு அதிசய மீன் இனத்தைப்பற்றி பின்வருமாறு காண்போம். லத்தீன் மொழியில் Mola என்றால் “Millstone” (ஆலை கல்) என்று பொருள், உடம்பில் மேலும் கீழும் நீண்டுள்ள துடுப்புகள், மற்றும் தட்டையான உடல் அமைப்பால் அவை இப்பெயர் பெற்றன. சிலர் பிறை போன்ற உருவம் கொண்டதால் இவற்றை Moon Fish என்றும் அழைத்தனர்.

சரி mola mola நமக்கென ஒளித்துவைத்திருக்கும் அமானுஷ்யத்தை காண்போம் வாருங்கள். உலகில் வாரம்தோறும் 240 புதுவகை மீன்கள் கண்டறியபடுவதாகவும், இது வரை 33100 வகை மீன்கள் இனம்கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றுள் எவ்வகை மீன்களுக்கு இல்லாத வகையில் Mola Molaக்கள் தங்கள் உடம்பில் மேலும் கீழும் துடுப்புகளை கொண்டுள்ளது. பிற மீன்களை போல இவற்றிக்கு வால்கிடையது, மென்று உன்ன தாடைகளும் கிடையாது. அடிப்படை உருவ அமைப்பிலே ஆராச்சியாளர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுள் இவை ருசிகர உணவாக கூறப்பட்டாலும் மிக குறைந்த அளவிலான மீன்களே பிடிபடுகின்றன, காரணம் இந்த மீன்கள் ஆழ்கடல் மீன்கள். சுமார் 2500 அடிவரை கடலின் ஆழத்தில் வசிப்பவை. உடல் சூட்டிற்காக மட்டுமே அவ்வப்போது மேற்பகுதிக்கு வருகின்றன. மேலும் அறிவியலாளர்கள் இவற்றை shy fish என்றும் அழைக்கின்றனர்.

தாடைகள் இன்றி காணப்படுவதால், அதிகம் உற்சாகம் இல்லாத மீன் இனமான Jelly மீன்களே இவற்றின் பிரதான உணவு. இதன் உருவ அமைப்பால் இவற்றை ஏலியன் மீன்கள் என்றும் சிலர் அழைக்கின்றனர். தடித்த எலும்புகள் கொண்ட உருவ அமைப்பை உடைய மீன் வகையை சேர்ந்த இந்த mola mola அந்த வகை மீன் கூட்டத்தில் மிக பெரியவை. 1000 kg க்கும் மேல் வளரக்கூடியவை. ஆச்சர்யத்தின் உச்சமாக ஒரு பிரசவத்தில் சுமார் 300 மில்லியன் முட்டைகளை இடுகின்றன. Vertebrate (முதுகெழும்பு கொண்ட உயிரினம்) இனங்களில் அதிக குழந்தைகளை கொண்ட ஒரே இனம். வால் இல்லை, உன்ன தாடைகள் இல்லை, alien போன்ற உருவ அமைப்பென்ற காணும் அனைத்திலும் ஆச்சர்யப்படவைக்கிறது. Indonesia நாட்டில் Bali என்ற நகரில் கடற்கரையில் இவற்றுடன் நீந்தி செல்ல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதனுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாத மீன், ஒரு முறை முழுமையாய் வளர்ந்த ஒரு mola mola ஒரு படகின் மீது பாய்ந்து அதில் இருந்த சிறுவனை தண்ணீரில் தள்ளியதாகவும், பின் அவன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கதைகள் உள்ளன. ஆனால் இந்த வகை மீன்களின் குணாதிசியங்கள் பற்றிய முழுமையான ஆய்வு யாரிடமும் இல்லை. அதிக தகவல்களை கொண்டிராத மீன்களின் இவையும் ஒன்று.
மீன்கள் என்றாலே சுறுசுறுப்பு என்ற கூற்றையும் இவை முறியடிக்கின்றன. ஆரம்பகால ஆராய்ச்சிகளில் இவற்றின் உடல் அமைப்பால் இவை மிகவும் மெதுவாக நகரும் மீன்களாக கண்டறியப்பட்டன. ஒரு நாளிற்கு மணிக்கு 3.2கி.மீ என்று ஒரு நாளைக்கு இவை 26கி.மீ மட்டுமே பயணிக்கின்றன. 2.7 inch என்ற தடித்த தோல்களை கொண்ட இவற்றிக்கு Accacoelium contortum எனப்படும் தட்டைப்புழு உண்ணிகளும் உண்டு. 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியதாக கூறப்பட்டாலும், இவற்றின் வாழ்நாள் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இவற்றின் இனப்பெருக்க முறையும் கேள்விக்குறியே.

பிறக்கும் பொழுது ஒரு கிராமுக்கு குறைவான எடையும் 2.5மி.மீ அளவு மட்டுமே உள்ள இந்த இனங்கள், விஸ்வரூபமாய் வளர்ந்து இன்றும் வாழ்கின்றன. puffer மீன் இனங்களில் இருந்து சுமார் 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவை பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கின்றன. இதை போன்ற இனம் காணாத பல வகை அமானுஷ்ய உயிரினங்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் வருகின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close