உலகில் வேறெங்கும் இல்லாத அமானுஷ்யங்கள் நிறைந்த Movile குகை!

காற்றில் கலந்துள்ள வாயுக்களால் வீசும் அழுகிய முட்டை மனம் சுவாசிப்பதை கடினமாக்கியது

காற்றில் கலந்துள்ள வாயுக்களால் வீசும் அழுகிய முட்டை மனம் சுவாசிப்பதை கடினமாக்கியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உலகில் வேறெங்கும் இல்லாத அமானுஷ்யங்கள் நிறைந்த Movile குகை!

லியோ

அறிவியலின் சிறப்புகள் நம்மை ஆளுமை செய்யும் உலகில், எங்கு திரும்பினாலும் அறிவியலின் தொகுப்பே. ஆனால். அந்த அறிவியலும் வியந்து பார்க்கும் பல அமானுஷ்யங்கள் இங்கே குவிந்து கிடக்கின்றன. இன்று நாம் காணவிருக்கும் இந்த அமானுஷ்யம் அறிவியலின், உயிரியலின் உச்சம் என்றாலும் அது மிகையல்ல.

Advertisment

Romania பெருமை பல அசாதாரண இடங்களை கொண்டது. அதில் ஒன்றே Pestera Movile என்று அழைக்கப்படும் Movile குகை. ROMANIA கருங்கடல் அருகே Constanta என்ற நாட்டில் Mangalia என்ற ஊரில் அமைந்துள்ள இந்த குகை அருகே பலமுறை சில விசித்திர உயிரினங்கள் தென்பட்டன. அந்த குகை 1986ம் ஆண்டு Cristian Lasu என்பவரால் கண்டறியப்பட்டது. மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது, நாம் அறிந்த அறிவியல் கூற்று. ஆனால் இவ்வுலகிற்கு தெரியாமல் கடந்த 5.5 மில்லியன் ஆண்டுகளாக எந்த வித பரிணாம வளர்ச்சியும் இன்றி இவ்விடம் அமைதியாய் துயில் கொண்டுள்ளது.

உலகின் பல இடங்களில் பல குகைகள் உள்ளபோது இதில் அப்படி என்ன ஆச்சர்யம், அமானுஷ்யம் ஒளிந்திருக்கிறது என்று நீங்கள் வினைவது முறையே. உலகின் உள்ள குகைகள் மட்டுமின்றி உலகில் எந்த இடத்திலும் காணப்பெறாத விசித்திரமான வளிமண்டல சூழல் இங்கு உள்ளது, இந்த வளிமண்டலத்தில் உலகின் வேறெங்கும் இல்லாத அளவிற்கு காற்றில் பிராணவாயு (Oxygen) மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. நூறு சதவிகிதத்திற்கு அதிகமான அளவில் காரியமிலவாயும் (Carbon dioxide) இரன்டு சதவிகிதம் மீத்தேன் வாய்வும் தென்படுகிறது. இந்த வாயுக்களின் கலவையால் இந்த குகையின் நீரில் Hydrogen Sulfide மற்றும் Ammoniaவின் அளவு அதிகமாக உள்ளது. உலகில் இது போன்ற வளிமண்டல சூழ்நிலை எங்கும் பதிவானதாக ஆய்வுகளோ குறிப்புகளோ இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1986ம் ஆண்டு சில கம்யூனிஸ்ட் ரோமானிய அரசை சேர்ந்த ஆராச்சியாளர்கள் மின் ஆலை ஒன்று கட்ட முடிவெடுத்தனர். அதற்கான இடத்தை தேடும் போதே அவர்கள் பாதையில் குறுக்கிட்டது, 5.5 மில்லியன் ஆண்டுகளாக உறங்கிக்கொண்டு இருந்த அந்த Movile குகை. அந்த ஆராச்சியாளர்களுள் Cristian Lasu தான் அந்த குகைக்குள் செல்ல முதலில் முடிவெடுத்தார். ஆனால் அந்த குகைக்குள் செல்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, பூமிக்கு அடியில் 65 அடி ஆழத்திற்கு குறுகலான பாதை வழியே செல்லவேண்டும்.

Advertisment
Advertisements

தலையில் அணிந்திருக்கும் கவசத்தில் உள்ள டார்ச் (Torch) மூலம் பெரும் ஒளியே அவர்களுக்கு வழி நெடுகிலும் உள்ள ஒரே ஒளி ஆதாரம். அந்த மைஇருட்டில் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, தரை முழுக்க பூச்சிகளும், தேங்கி உள்ள நீரில் நிறைந்திருக்கும் புழுக்களும் அவர்களுக்கு அருவெறுப்பை தந்தது. காற்றில் கலந்துள்ள வாயுக்களால் வீசும் அழுகிய முட்டை மனம் சுவாசிப்பதை கடினமாக்கியது.

இந்த குகையின் 65 சதவிகிதம் நீரினுள் மூழ்கியுள்ளது, இது அவர்களின் பெரிய சவாலாக அமைந்தது. நீராடியில் குறுக்கும் நெடுக்கும் நிறைந்த பாதைகளில் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் கண்டறிந்தது அங்கு வாழும் 48 வகையான உயிரினங்களே. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், அதில் 33 வகையான உயிரினங்களை இதுவரை இவ்வுலகம் கண்டதில்லை. இவற்றுள் மூன்று வகை சிலந்திகளும், நீர் தேளும் அடங்கும். இந்த உயிரினங்கள் பெரும்பாலும் நிறமற்று வெளிர் நிறமாகவும், கண்பார்வை மங்கியும் காணப்படுகிறது.

publive-image

சூரிய வெளிச்சம் சற்றும் இல்லாத அந்த மைஇருட்டில் அவை எப்படி உண்டு வாழ்கின்றன என்பது இன்றளவும் அமானுஷ்யமே. ஆனால் ஆராச்சியாளர்களோ பூமியின் மேற்பரப்பிலிருந்து ஒழுகும் நீரிலிருந்தும், அங்குள்ள நீரில் மிதக்கும் ஒரு வகை பாக்டீரியாவை உண்டுமே அவை உயிர்வாழ்வதாக கூறுகின்றனர். கேட்க விசித்திரமாய் இருப்பினும் உலகில் இந்த Movile குகை மட்டுமே இது போன்று உணவு பெரும் குகையாக திகழ்கிறது.

உலகில் நிலவும் சுற்றுசூழலுக்கு மாறாக இங்கு chemosynthesis (பிராணவாயு அற்ற வாழ்வு) என்ற சுற்றுச் சூழல் நிகழ்கிறது. இதை போன்ற சூழல் பூமியின்றி வேற்று கிரகங்களில் மட்டுமே காணப்படுகிறது என்பதே அமானுஷ்யத்தின் உச்சம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு, Movile குகை பூமியில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சூழல் அமைப்பாக உள்ளது. அது விட்டுக்கொடுக்க இன்னும் பல இரகசியங்கள் உள்ளன. குகைகளின் வண்டல்களில் புதைக்கப்பட்ட ஏராளமான உயிரினங்களும் அடையாளம் காணப்படுவதற்காக காத்திருக்கின்றன.

நிலவிற்கு சென்று வருபவர்களுக்கு தரும் மரியாதையை இந்த குகைக்கு சென்று வருபவர்களுக்கும் தரப்படுகிறது. 2010ம் ஆண்டு Rich Boden என்பவரே இதனுள் சென்றுவந்த 29ம் நபர் ஆவார். அங்கு, இறுதியாய் சென்றுவந்தவர் இவர் தான்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: