திடீரென கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்வதைப் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும். உயிரினங்களுக்குள் நடக்கும் இரசாயன மாற்றத்தால் இவ்வாறு நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கையின் அசாத்திய படைப்புகள் மனிதர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதன்படி, பல நேரங்களில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்வதை நாம் பார்த்திருப்போம். இதனை பையோலுமினசென்ஸ் எனக் கூறுவார்கள்.
கடலுக்கு அடியில் இருக்கும் உயிரிழங்கள் ஒளியை உமிழ்வதால் இந்த மாற்றம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஜெல்லி மீன்கள், சில வகை பாசிகள் மூலமாக இவை நடைபெறுவதாக அறிகிறோம். அதாவது உயிரினங்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றமான லூசிஃபெரேஸ் காரணமாக பையோலுமினசென்ஸ் நடைபெறுகிறது.
இந்த இரசாயன மாற்றத்தின் மூலம் ஒளியின் வாயிலாக ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் நிறம் மற்றும் உறுதிப்பாடு ஒவ்வொரு வகையான உயிரினத்திற்கும் ஏற்ப மாற்றம் பெறும்.
கடலின் மீது மழைத்துளிகள் படும் போது பையோலுமினசென்ஸ்-ஐ நம்மால் காண முடியும். மழைத்துளிகள் கடலின் மேற்புறத்தில் படும் போது, அதனால் துண்டப்படும் ப்ளாங்டான்கள் இவ்வாறு ஒளிர்கின்றன. இதன் காட்சி காண்போருக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இவை நீலம் மற்றும் அடர் பச்சை நிறங்களில் காட்சி தருகின்றன.
நேற்றைய தினம் கூட கடலில் தோன்றிய பையோலுமினசென்ஸ் தொடர்பான வீடியோவை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“