இரட்டை மூளை கொண்ட அதிசய மனித இனம்!

அத்தகைய அசாத்திய சக்திகளை உண்மையில் அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று தற்போது யோசிக்க தோன்றுகிறது

By: Updated: September 30, 2018, 10:56:26 AM

லியோ

கோடிக்கணக்கான நரம்புகள், உலகத்தில் அதி உயர்ந்த pixel கொண்ட கேமராவாக கருதப்படும் கண்கள், 206 எலும்புகள், என்று நம் உடல் சார்ந்த அதிசய பட்டியல் நீள்கிறது. உலகின் நம்மை சுற்றி பல அமானுஷ்யங்கள் இருக்க அவற்றின் உச்சமாய் திகழ்கின்றோம் மனிதர்களாகிய நாம். மூளை மனித உடல் உறுப்புகளின் ராஜா. பல சூப்பர் கம்ப்யூட்டர்களை விட சிறந்த அதிநவீன கம்ப்யூட்டர் அது. டா வின்சி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ராமானுஜம் போன்ற அறிஞர் பெருமக்கள் கூட தங்களின் மூளையை வெறும் 17 முதல் 23 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரி அந்த மூளையின் சிறப்பை அதனுள் ஒளிந்திருக்கும் அமானுஷ்யத்தை காண்போம் வாருங்கள்.

பொதுவாக மனித உடலில் ஜோடி உறுப்புகள் அதிகம். ஆனால் மனிதனின் மூளையும் ஒரு ஜோடி உருப்பென்று உங்களுக்கு தெரியுமா?. நான் கூறுவது சிறு மூளை, பெரு மூளை என்ற ஜோடி உறுப்பு அல்ல. மாறாக நம் உடலுக்குள்ளே நம் இரண்டாம் மூளையாக செயல்படும் இன்னொரு உறுப்பை பற்றியே. ஆம் அதுவே நாம் உண்ணும் உணவை செரிக்கும் வயறு. அதை தான் அறிஞர்கள் நம் இரண்டாம் மூளையாக கருதுகின்றனர். “The Good Gut” என்ற தலைப்பில் Justin மற்றும் Erica என்ற மருத்துவ அறிஞர்கள் இதை பற்றிய ஒரு முழு ஆய்வை நடத்தி அதை பற்றிய கட்டுரையை வெளியிட்டு உள்ளனர். அவர்கள் அந்த பதிப்பில், நாம் பிறக்கும் போதே நம் மூளைக்கும் வயிற்றிற்கும் ஒரு மூலாதார தொடர்பு இருப்பதாகவும், சில சமயங்களில் புதிய மனிதர்களை சந்திக்கும் போதும், மிகுந்த அச்சத்தின் போதும், இன்னும் பல சந்தர்ப்பங்களில் அதை நாம் உணர்வதாகவும் கூறுகின்றனர்.

உடல் ரீதியாக உணரப்படும் அனைத்தும் உதாரணமாக சோர்வு, பசி, அச்சம், நோய் தாக்கம், பல வித மனங்கள் என்று எல்லாம் நம் வயிற்றால் உணரப்படுகின்றது. இதை நாம் பல முறை அனுபவித்தும் இருப்போம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நம் மூளை உணர்த்தும் பல விஷயங்களை நம் வயிற்றல் உணர்வது ஆச்சர்யமே. Justin மற்றும் Erica இதற்கு காரணமாக இருப்பது ஒரு மிக பெரிய நரம்பு மண்டலம் என்றும் கூறுகின்றனர். மூளையின் முழு வேலைகளையும் செய்யாவிட்டாலும், நம் வயிறு எப்போதும் ஒரு கூடுதல் மூளையாகவே செயல்படுவது உண்மையே. மேலும் அந்த அறிஞர்கள் கூறுகையில், உடலில் எந்த பாகத்திலும் இல்லாத அளவிற்கு மனிதனின் உடலில் குறிப்பாக வயிற்றில் அதிக அளவிலான நுண்ணுயிரிகள் உள்ளதாகவும், நம் வயிறு இரண்டாம் மூளையாக செயல்பட இதுவும் ஒரு காரணமாகவும் தெரிகின்றனர்.

உடலின் மொத்த நரம்புமண்டலமும் நம் மூளையோடு தொடர்புடையது என்ற போதும் இதய துடிப்பு, செரிமானம் ஏன் நாம் வாங்கும் மூச்சும் கூட இரண்டாம் மூளையாக செயல்படும் வயிற்றால் மேற்கொள்ளப்படுவது ஆச்சர்யமே. Justin, Erica தவிர இந்த இரண்டாம் மூளையை பற்றிய ஆய்வில் பெரிதாக யாரும் இன்னும் ஈடுபடவில்லை என்பதும் உண்மை. மனித உடலில் இப்படி ஒரு மாற்று சக்தி இருப்பதும் யாரும் அறிந்திராததே.

பழங்காலங்களில் பல ஞானிகளும், யோகிகளும் உண்ணாமல், உறங்காமல் தவம் செய்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம், அவர்கள் தங்கள் உடலை வெறுநிலை கொண்டு செல்ல வல்லவர்கள் என்றும் நாம் அறிவோம். அத்தகைய அசாத்திய சக்திகளை உண்மையில் அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று தற்போது யோசிக்க தோன்றுகிறது. இரண்டு மூளைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினால் எதுவும் சாத்தியமே.

மூளையின் உச்சகட்ட பலனை ஒரு உண்மை சம்பவத்தின் மூலம் காண்போம். பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது வானில் ஒரு பெரும் சத்தம், சோதனை ஓட்டத்தில் இருந்த ஒரு ஆள் இல்ல குட்டி விமானம் வெடித்த சத்தமே அது, ஆனால் வெடித்த விமானத்தின் பாகங்கள் அவனை நோக்கி சீறி பாய்ந்ததை அவன் அறியவில்லை. ஒரு சிறு துண்டு அந்த சிறுவனின் தலையை துளைத்து சென்றது. மூலையில் ஏற்பட்ட சிறு அதிர்வை தவிர வேறு காயங்கள் இன்றி அதிர்ஷடவசமாக அவன் உயிர் தப்பினான். ஆனால் அவன் வீடு திரும்பிய போதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது, அவன் மனநல பாதிப்பு குறைய தொடங்கியது, மேலும் அசாதாரண ஓவியங்களை வரையும் திறன் பெற்றான். மூளையில் ஏற்பட்ட சிறு பாதிப்புகூட அவனுக்கு நன்மையில் முடிந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Mystery man brain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X