தேன் பட்டால் தலைமுடி நரைக்குமா? அறிவியல் விளக்கம் அளிக்கும் டாக்டர் அருண் குமார்

தலை முடியில் தேன் பட்டால் அவை நரைத்து விடும் என சிலர் கருதுவார்கள். அதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து அறிவியல்பூர்வமாக மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளிக்கிறார்.

தலை முடியில் தேன் பட்டால் அவை நரைத்து விடும் என சிலர் கருதுவார்கள். அதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து அறிவியல்பூர்வமாக மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளிக்கிறார்.

author-image
WebDesk
New Update
honey and grey hair

முடியில் தேன் பட்டால் அவை நரைத்து விடும் என்று பல காலமாக கூறி வருகிறார்கள். இது உண்மையில் சாத்தியமா என்பதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

முடியின் வேர்ப் பகுதியை ஹேர் ஃபாலிகிள்ஸ் எனக் கூறுவோம். இந்த ஹேர் ஃபாலிகிள்ஸில் மெலனோசைட்ஸ் இருக்கும். மெலனின் பிக்மென்ட் உற்பத்தி ஆவதற்கு காரணமாக அமைவது இந்த மெலனோசைட்ஸ் தான்.

மெலனோசைட்ஸ் மரபணு ரீதியாக பாதிப்படையக் கூடும். இவை பாதிக்கப்படும் போது மெலனின் உற்பத்தி இல்லாமல் போய் விடும். இந்த காரணத்தினால் தான் தலை முடி நரைக்கத் தொடங்கும்.

தேனில் மிகச் சிறிய அளவு க்ளூகோஸ் ஆக்ஸிடைஸ் இருக்கிறது. இவை அதிகப்படியான தண்ணீர் அல்லது ஈரப்பதமான காற்றில் கலக்கும் போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கு நிறத்தை மாற்றுவதற்கான தன்மை இருக்கிறது.

Advertisment
Advertisements

ஆனால், தேனில் இதன் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், நாம் தலை முடிக்கு பயன்படுத்தும் நிறங்களில் இருப்பதை விட ஆயிரம் மடங்கு குறைவாக இருக்கிறது. இந்த அளவு  ஹைட்ரஜன் பெராக்ஸைட் கொண்டு முடியின் நிறத்தை மாற்ற முடியாது என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

honey Grey Hair

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: