scorecardresearch

முக்கிய நடிகை விலகல் சர்ச்சை… விறுவிறுப்பா போற இந்த சீரியல் இனி என்ன ஆகும்?

Rachitha Mahalakshmi Tamil News: ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து நடிகை ரச்சிதா விலகவுள்ள நிலையில், அவரது ரோலில் இனி யார் நடிக்க உள்ளார்கள், அது சீரியலின் விறுவிறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? எனக் கவலை தெரிவித்து வருகின்றனர் சீரியல் ரசிர்கர்கள்.

naam iruvar namakku iruvar serial Tamil News: Rachitha quitting naam iruvar namakku iruvar serial Tamil News

naam iruvar namakku iruvar serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடிப்பதற்குமுன் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரச்சிதாவுக்கு வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் கன்னட சினிமாவில் நடிக்க உள்ளதாகவும், அங்கு பெரிய நடிகர் ஒருவர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து நடிகை ரச்சிதா தரப்பு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

‘நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்’ கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இதன் ஆரம்பகால கதைக்களம் வேறு ஒன்றாக இருந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் செந்தில் பாலாஜி இருவேடங்களில் தோன்றினார். இது சீரியலில் புதிது என்பதால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இருப்பினும், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டவே, சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவதில் சிரமம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சீரியல் வெளியாகி இருந்தாலும் தொடக்கத்தில் கிடைத்த வரவேற்பு மீண்டும் கிடைக்கவில்லை.

எனவே, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் பாகம்- 2 படப்பிடிப்பை சீரியல் குழு தொடங்க முடிவு செய்தது. சீரியலின் அனைத்து கதைக்களமும் மாற்றப்பட்டு ஒரு புதிய கதைக்களம், புதிய பிரச்சனை, புதிய சாவல் என புது அம்சங்களோடு மிரட்டியது. சீரியல் ரசிகர்களும் தங்கள் பேராதரவை தற்போது வரை கொடுத்து வருகின்றனர். இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ஏனென்றால், சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகர்கள் மாறினாலும் அதன் 3 சீன்சகளிலும் நடிகை ரச்சிதா ஹீரோனியாக நடித்து சீரியலை ஹிட்டாக்கி இருந்தார். பின்னர் இந்த சீரியலில் தோன்றிய அவருக்கு ரசிகர்கள் தங்கள் வரவேற்பை கொடுத்தனர்.

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் உள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தவிர முத்துராசை கொன்றது யார் என்ற ஒற்றை கேள்வியை வைத்தே கதை 2 வாரங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், முத்துராசுவை கொன்றது யார்? என்ற டெம்ப்லேட்டுடன் பல மீம்களும் இணயத்தில் வலம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விறுவிறுப்பான காட்சிகளோடு ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் சஸ்பென்ஸ்கள் அதிகரித்து காணப்படும் இந்த சீரியலில் இந்த வாரம் புது என்ட்ரி ஆக மாறன் என்ற கதாபாத்திரம் சீரியலில் நுழைய உள்ளது. எனவே இதை பார்க்கவுள்ள ரசிகர்கள் இனி கதை எப்படிப் போகும் என்னவாக இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில், சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ரச்சிதா சீரியலில் இருந்து விலக உள்ளார். ஒருவேளை இவர் விலகிவிட்டால் மகாலட்சுமி காதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார்கள். அது சீரியலின் விறுவிறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என கவலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்இந் தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Naam iruvar namakku iruvar serial tamil news rachitha quitting naam iruvar namakku iruvar serial tamil news

Best of Express