தலைமுடி சீராக வளர இந்த ஒரு பேக் போதும் – நாம் இருவர் நமக்கு இருவர் வைஷ்ணவி டிப்ஸ்!

Naam Iruvar Namaku Iruvar Serial Vaishnavi Arulmozhi Beauty Secrets முகத்திற்கு இப்போதுதான் பீட்ருட் அரைத்து ஃபேஸ் பேக் போட்டு வருகிறேன். எனக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கிறது.

Naam Iruvar Namaku Iruvar Serial Vaishnavi Arulmozhi Beauty Secrets
Naam Iruvar Namaku Iruvar Serial Vaishnavi Arulmozhi Beauty Secrets

Naam Iruvar Namaku Iruvar Serial Vaishnavi Arulmozhi Beauty Secrets : ‘சிலாக்கி டும்மா’ எனும் யூடியூப் சேனல் மூலம் அறிமுகமாகி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘மலர்’ சீரியல் வழியே சின்னதிரையில் காலடிப் பதித்தார் வைஷ்ணவி அருள்மொழி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய எளிமையான சரும பராமரிப்பு குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

“நான் சரும பராமரிப்பிற்கு என்று பெரிதாக எதையும் செய்ய மாட்டேன். எப்போதும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். அதனால் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பேன். அதிலும் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன். பருக்கள் வந்தால் மட்டும் அதற்கேற்ற பொருள் ஏதாவது உபயோகிப்பேன்.

சீராகத் தலைமுடி வளர்வதற்கு, வெந்தயம் சிறிதளவு எடுத்து ஊறவைத்து அரைத்து, அதனைத் தலைமுடி வேர் முதல் நுனி வரை தேய்த்து, ஊறவைத்து அலசலாம். இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நிகர் எதுவுமில்லை. அதேபோல வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்து குளிப்பது அவசியம். முகத்திற்கு இப்போதுதான் பீட்ருட் அரைத்து ஃபேஸ் பேக் போட்டு வருகிறேன். எனக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கிறது.

நான் மேக்-அப் பிரியை அல்ல. என்னிடம் எப்போதும் லிப் பாம் அல்லது வேஸ்லின் இருக்கும். இல்லையென்றாலும் தேங்காய் எண்ணெய் போதும். மேக்-அப் போடும்போது, அந்த பொருள்களை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்யக்கூடாது. அது சருமத்தை டேமேஜ் செய்யும். அதற்கு முன்பு, மாய்ஸ்ச்சரைசர் பிறகு ப்ரைமர் உள்ளிட்டவற்றைப் போட்டபிறகு உங்கள் மேக்-அப் பொருள்களை அப்ளை செய்யலாம். அதேபோல வெயிலில் செல்வதற்கு முன்பு, சன்ஸ்க்ரீன் உபயோகிக்கலாம்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Naam iruvar namaku iruvar serial vaishnavi arulmozhi beauty secrets

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com