Nadhaswaram Malar Srithika Beauty Secrets Skincare Routine Tamil : 'கலசம்' எனும் தொடரில் துணை நடிகையாக அறிமுகமாகி 'நாதஸ்வரம்' தொடரில் மலராக முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றி, தமிழ் நாட்டு மக்களின் வீடுகளில் ஒருவராகவே மாறியவர் ஸ்ரித்திகா. வெண்ணிலா கபடி குழு, வேங்கை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்த இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது. எப்போதும் முகப்பொலிவுடன் காணப்படும் ஸ்ரித்திகா, சோப் பயன்படுத்தவே மாட்டாராம். மேலும், பல சரும பராமரிப்பு ரகசியங்களை இங்கே பகிர்ந்துள்ளார்.
Advertisment
Srithika Beauty Secrets
"பெரிதாக பியூட்டி சீக்ரெட்ஸ் என்று எதுவுமில்லை. எந்த செயற்கைப் பொருளையும் அதிகம் பயன்படுத்தவே மாட்டேன். இயற்கைப் பொருள்களை மட்டும்தான் உபயோகிப்பேன். அதிலும் குறிப்பாக நான் எப்போதும் சோப் பயன்படுத்தவே மாட்டேன். அதற்கு பதிலாகக் கடலை மாவு, பாசி பருப்பு மாவு, பாதம் பொடி என என் குளியலறை முழுவதும் இந்த மாவுகள் நிறைந்த டப்பாக்கள்தான் இருக்கும்.
Srithika with her Husband
Advertisment
Advertisements
நான் அதிகம் மேக்-அப் பொருள்களையும் பயன்படுத்த மாட்டேன். லிப்ஸ்டிக் மற்றும் கண் மை மட்டும்தான் உபயோகிப்பேன். மேக்-அப் அகற்றவும் தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின் பயன்படுத்துவேன். முடிந்த அளவிற்கு இயற்கை மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் சரும பராமரிப்புப் பொருள்களை பயன்படுத்தினாலே போதும்.
Nadhaswaram Malar Srithika Photos
தலைமுடியைப் பொறுத்தவரை, தேங்காய் எண்ணெய் அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை நன்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே போதும். முடி நன்கு வளர்வதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை மிதமான அளவு சுடவைத்து, அதில் சின்ன வெங்காயம் சாறு கலந்து, தலையில் அப்லை செய்யலாம். சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனை நீங்கும்.
Srithika Latest Photos
லிப் பாம் மற்றும் சுடுதண்ணீர் இல்லாமல் வெளியே செல்லவே மாட்டேன். இது இரண்டுடன் க்ரீன் டீ பாக்கெட் எப்போதும் என்னுடனே பயணம் செய்யும் பொருள்கள். அதேபோல பிரைட் வண்ண உடைகள்தான் செட் ஆகும், அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றபடி, டயட் எல்லாம் நான் இருந்ததே இல்லை".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil