/indian-express-tamil/media/media_files/AGlfaHigRgLhPOk0gmWc.jpg)
Srithika Sri second Marriage
சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ரிதிகா ஸ்ரீ. தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம், மாமியார் தேவை, உயிர்மை, குலதெய்வம், கல்யாண பரிசுஎன பல சீரியல்களில் நடித்தார்.
வெண்ணிலா கபடி குழு, மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி, வேங்கைஉள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்ரிதிகாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த ஷானீஷுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
சில காலம் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரிதிகா,மகராசி சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதில், தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யனுடன் சேர்ந்து ஃபோட்டோஷூட் எடுப்பது, இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் வீடியோ பதிவிடுவது என இருவரும் ஒன்றாக வலம் வந்தனர்.
முதலில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. ஆனால் ஸ்ரிதிகா நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறி அதை மறுத்துவிட்டார்.
ஆனால், தற்போது இந்த ஜோடி யாரும் எதிர்பாராத விதமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரிதிகா இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில், ”சில வருடங்களுக்கு முன்பு நானும் ஆர்யனும் எங்களுடைய முந்தைய திருமண வாழ்வில் இருந்து பிரிந்தோம். இதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
இதைவிட சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய நட்பு மற்றும் புரிதலைக் கொண்டு அடுத்தக்கட்ட வாழ்வில் இணைய முடிவு செய்திருக்கிறோம்.
எங்கள் பெற்றோர் ஆசியுடன் நானும் ஆர்யனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். விரைவில் புகைப்படங்கள், வீடியோக்கள், சோஷியல் மீடியாவில் பேட்டிகளும் கொடுக்கிறோம். எனது இன்ஸ்டாவில் முன்னாள் கணவர் பெயரை மாற்ற முடியாமல் இருக்கிறது.
அந்த டெக்னிக்கல் குளறுபடியையும் சரி செய்ய முயன்று வருகிறோம்’ என ஸ்ரிதிகா அதில் கூறியுள்ளார்..
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.