/indian-express-tamil/media/media_files/2025/09/04/nadhiya-actress-share-still-young-tips-in-tamil-2025-09-04-14-20-36.jpg)
நடிகை நதியா தனது இளமைக்கான ரகசியம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
90-களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. மலையாளத்தில் 1984 ஆம் ஆண்டு 'நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தமிழில் இயக்குநர் பாசில் 1985-ல் தமிழில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில் முதல் படத்தில் பத்மினி போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்த அவர், பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும், நதியா தனது புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகினார். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனா அவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு, 2008 ஆம் ஆண்டில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது 58 வயதாகிறது. ஆனாலும், இளமையாகவே இருக்கிறார். இந்நிலையில், நடிகை நதியா தனது இளமைக்கான ரகசியம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கலாட்டா மீடியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனது இளமைக்கு ரகசியம் எதுவுமே கிடையாது. நாம் கடினமாக உழைக்க வேண்டும். நான் நல்ல உணவுப் பிரியராக இருந்தாலும், அதற்கு ஏற்றார் போல் உடற்பயிற்சி மேற்கொள்வேன். ஜிம், நடைப்பயிற்சி போவது, யோகா செய்வது போன்றவற்றை தொடர்ந்து செய்வேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.