நாகை – இலங்கை கப்பல் சேவை; காலநிலை மாற்றத்தால் பிப்.28 வரை தற்காலிகமாக நிறுத்தம்

நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்படுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nagai Sri Lanka ship transport

நாகை – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் முதல் சேவை நிறுத்தப்பட்டது.

Advertisment

பின்னர், ‘சுபம்’ நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ என்ற புதிய கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இயக்கப்பட்டது. வாரத்தில் ஐந்து நாட்கள் இந்த சேவை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனால், வானிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக கப்பல் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.

பிப்ரவரி 22ம் தேதி மீண்டும் தொடங்கிய இந்த சேவை, மோசமான வானிலை காரணமாக பிப்ரவரி 28ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடங்கிய சில நாட்களிலேயே மீண்டும் சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனினும், மார்ச் 1ம் தேதி முதல் வழக்கம்போல் சேவை மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஒரு பயணி 10 கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும், இலங்கையில் மூன்று நாட்கள் தங்கி சுற்றுலா மேற்கொள்ளும் பேக்கேஜ் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்களில் இரு மார்க்கத்திலும் கப்பல் சேவை நடைபெறும்.

Sri Lanka Nagapattinam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: