மருதாணியில் இதை சேர்த்து வைங்க… நகசுத்தி, நகசொத்தை நீங்கும்; டாக்டர் தீபா அருளாளன்

நகங்கள் வெறும் அழகுக்கானவை மட்டுமல்ல, அவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. நகங்களில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கூட உடலில் உள்ள குறைபாடுகளை உணர்த்தலாம் என்கிறார் டாக்டர் தீபா.

நகங்கள் வெறும் அழகுக்கானவை மட்டுமல்ல, அவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. நகங்களில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கூட உடலில் உள்ள குறைபாடுகளை உணர்த்தலாம் என்கிறார் டாக்டர் தீபா.

author-image
WebDesk
New Update
Nail Fungus

மருதாணியில் இதை சேர்த்து வைங்க… நகசுத்தி, நகசொத்தை நீங்கும்; டாக்டர் தீபா அருளாளன்

நகங்கள் வெறும் அழகுக்கானவை மட்டுமல்ல, அவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. நகங்களில் ஏற்படும் சிறு மாற்றங்களும் கூட உடலில் உள்ள குறைபாடுகளை உணர்த்தலாம் என்கிறார் டாக்டர் தீபா. நகங்களின் இயற்கையான பளபளப்பு குறைவது, அழுத்தும்போது வெளிறிப் போவது, மெதுவாக வளர்வது, கோடுகள் விழுவது அல்லது மஞ்சள் நிறமாக மாறுவது போன்ற அறிகுறிகள் உடலில் ஏதோ பிரச்னை உள்ளது என்பதை சுட்டிக்காட்டலாம். உதாரணமாக, நகங்கள் வெளிறினால் ரத்த சோகையாக இருக்கலாம், மெதுவாக வளர்ந்தால் கால்சியம் குறைபாடாக இருக்கலாம், மஞ்சள் நிறம் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயாக இருக்கலாம்.

ஆரோக்கியமான நகங்களுக்கு சில எளிய வீட்டு வைத்திய முறைகள்:

Advertisment

நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், நகம் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பரிந்துரைக்கிறார் டாக்டர் தீபா அருளாளன்.

உங்கள் நகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது பல தொற்றுக்களைத் தவிர்க்க உதவும். வாரத்திற்கு ஒரு முறை திரிபலா பொடி (நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் சேர்ந்த கலவை, இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தேங்காய் எண்ணெயுடன் கலந்து நகங்கள் மற்றும் நக இடுக்குகளில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இது நகங்களுக்கு ஊட்டச்சத்து அளித்து ஆரோக்கியமாக வளர உதவும். உணவில் கீரைகள், பால் மற்றும் முட்டை போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். இது நகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நகச்சொத்தை (Nail Fungus) மற்றும் நகசுத்தி (Nail Infection) போன்ற பிரச்னைகள் பலரையும் வாட்டுகின்றன. இதற்கு டாக்டர் தீபா இயற்கை வைத்தியத்தை கூறுகிறார்:

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி பொடி, வசம்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு

Advertisment
Advertisements

செய்முறை: குப்பைமேனி பொடி, வசம்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ளவும். இந்த பொடிகளுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பசை போல ஆக்கிக் கொள்ளவும். இந்த பசையை நகச்சொத்தை அல்லது நகசுத்தி உள்ள இடங்களில் மருதாணி போல பூசவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

குப்பைமேனி, வசம்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றுக்கு பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் இந்த கலவை நகத்தில் உள்ள தொற்றுகளை உடனடியாக குணப்படுத்த உதவும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், நகங்களுக்கு மருதாணி போடுவதும் நகப் பூஞ்சைக்கு நல்ல தீர்வாகும் என்கிறார் டாக்டர் தீபா.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: