Advertisment

உங்க நகம் உடையாம, அழகா இருக்கணுமா? இதை தொடர்ந்து பண்ணுங்க

நமது நகத்தின் ஆரோகியத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் பாதுகாக்க முடியும். மேலும் இப்படி செய்தால் நகத்தின் அழகும் அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நமது நகத்தின் ஆரோகியத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் பாதுகாக்க முடியும். மேலும் இப்படி செய்தால் நகத்தின் அழகும் அதிகரிக்கும்.

Advertisment

 தேங்காய்: தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல ஈரப்பதம் கொண்டது. இது நமது நகங்களுக்கு தேவையான சத்துகளை கொடுக்கும். தூங்குவதற்கு முன்பாக தேங்காய் எண்ணெய் வைத்து உங்கள் நகத்திற்கு மசாஜ் செய்யுதுவிட்டு தூங்குங்கள்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு உங்கள் நகத்திற்கு பொலிவான வெள்ளை நிறத்தை கொடுக்கும். எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து , அதில் கையின் நகத்தை ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழுத்து கழுவ வேண்டும்.

வைட்டமின் இ ஆயில்: இது நகத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும். ஈரப்பதத்தை தக்கவைக்கும். இதை நாம் நகம் முழுவதும் பூசி வேண்டும். வேண்டும் என்றால் அரை மணி நேரம் கழுத்து கையை கழுவலாம்.

ஆலிவ் எண்ணெய்: மிதமான சூட்டில் இருக்கும் ஆலிவ் எண்ணெய்யில் கையை சிறிது நேரம் வைக்க வேண்டும். வேண்டும் என்றால் சில துளி எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம்.

பூண்டு: பூண்டை நசுக்கி அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, நகத்தில் போடவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

  “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment