சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா நாகேஷ், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
நக்ஷத்திரா தன் கணவர் ராகவ் உடன் இப்போது வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கோகனட் ஃபாரெஸ்ட், ஹோய், கோல்டன் ஹேன்ட்ஸ் பிரிட்ஜ், ஹோன் கிம் ஏரி, ஹனோய் டிரெயின் ஸ்ட்ரீட் என பல இடங்களில் சுற்றி பார்த்தபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நீங்களும் இந்தியாவுக்கு வெளியே வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா? அப்படியானால், வியட்நாம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆசிய நாடுகளிலேயே மிகவும் அழகான நாடு என்றால் அது வியட்நாம் தான். கடற்கரைகள், ஆறுகள், புத்த பகோடாக்கள், தங்க கைகள் பாலம், ஹோய் அன் நகரம், பான் ஜியோக் நீர்வீழ்ச்சி என அங்கு ரசிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளது.
இந்த அனுபவத்தை நீங்கள் பெற வெறும் ரூ. 50- 60 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் போதும். விமான டிக்கெட்டுகளுக்கான விமான கட்டணம் ரூ.17,000 வரை குறைவாக இருக்கும். எனவே விமான முன்பதிவு இணையதளங்களைச் சரிபார்த்து, சற்று முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுங்கள்.
சமீபத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா நாடுகள் இந்திய பயணிகளை ஈர்க்கும் நோக்கில், தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை என்று அறிவித்தன.
தற்போது வியட்நாமும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“