நீங்கள் சர்வதேச நாடுகளைச் சுற்றிப்பார்க்கப் போகிறீர்களோ அல்லது வெறும் ஆர்வத்துக்காகவோ என்பது ஒரு பொருட்டல்ல. பல்வேறு வழிமுறைகளில் ஹலோ என்று நேசத்துடன் வணங்குதல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே.
உலகம் சுருங்கி விட்டது.பல்வேறு கலாசாரங்கள் ஒன்றுக்கு ஒன்று நெருங்கி வருகின்றன. இந்த பூமியில் வாழும் பெரும்பாலானோரில் ஒருவருக்கு ஒருவர் அதன் வளங்களை பகிர்ந்து கொள்கின்றோம். நமது பாதைகள், இப்போதும் பின்னரும் ஒவ்வொரு முறையும் கடந்து செல்வதற்காக பிணைக்கப் பட்டிருக்கின்றன. அதே போல. நமது பராம்பர்யங்களைச் சார்ந்து இன்னும் ஒரே மாதிரியாக இருக்கும் நாம் எப்படி வித்தியாசப்படுகின்றோம் என்பதையும் புரிந்து கொள்வது முக்கியமானதாக இருக்கிறது மக்கள் சந்திக்கும்போது ஒருவருக்கு ஒருவர் எப்படி மரியாதையாக வாழ்த்திக் கொள்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்வது அனைத்து விஷயங்களுக்கும் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். நீங்கள் சர்வதேச நாடுகளைச் சுற்றிப்பார்க்கப் போகிறீர்களோ அல்லது வெறும் ஆர்வத்துக்காகவா என்பது ஒரு பொருட்டல்ல. உலகம் முழுவதும் பல்வேறு விதங்களில் வாழ்த்துகள் சொல்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் படியுங்கள்.
தலைவணங்குதல்
இந்தியா, ஜப்பான், கம்போடியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் மக்களை வாழ்த்துவதற்கு தலைகுனிந்து வணங்குதல் ஒரு வழிமுறையாக இருக்கிறது. இந்தியாவில், உங்கள் கைகளை நீங்கள் நெஞ்சருகில் வைத்துக் கொண்டு உங்கள் உள்ளங்களை ஒன்றாக வைத்து தலைவணங்குவது வழக்கம். ஜப்பானில் மரியாதையைத் தெரிவிக்கும் வகையில் கொஞ்சம் குனிந்து வாழ்த்துவது வழக்கம். ஜப்பான் ஆண்கள், தங்கள் கைகளை தங்கள் உடலின் பக்கவாட்டில் வைத்தபடி தலைவணங்குவது வழக்கம். ஜாப்பானியப் பெண்கள் தங்கள் தொடையில் கைகளை வைத்தபடி தலைவணங்குகின்றனர். அண்மைகாலங்களாக ஒரு எளிய ஒப்புதல் கூட பண்பின் முறையாக பெரும்பாலான நாடுகளில் இருக்கின்றது.
முதியோர்களிடம் மரியாதையை வெளிப்படுத்துதல்
இந்தியா போன்ற நாடுகளில், முதிய நபர்களுக்கு பயபக்தியுடன் நீங்கள் மரியாதையை வெளிப்படுத்த வேண்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அது போல, அவர்கள் காலைத் தொட்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்றும் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. சில மேற்கத்திய நாடுகளில் இந்த பாரம்பர்யம் ஒரு அழகான வேடிக்கையாக இருப்பதை கண்டறியலாம். மிகவும் பரவலாகவும் காணப்படுகிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் முதியவர், மரியாதையை வெளிப்படுத்த வேண்டும். இளைய தலைமுறையினர் முதியவரின் முன்பு முழந்தாளிட்டு அமர்ந்து முதியவரின் கையை எடுத்து தங்களது நெற்றியில் வைத்துக் கொள்வார்கள். சில ஆப்பிரிக்க நாடுகளில் இளம் தலைமுறையினர் முழந்தாளிட்டு மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
நாக்கை குவித்து வெளிப்படுத்துதல்
இது போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த முறையில் மக்கள் வாழ்த்திக் கொள்வது திபெத்ய சமூகத்தில் நிலவுகிறது. இந்த முறையானது ஒரு தீய ராஜாவை குற்றம் சாட்டுகிறது. இந்த பாரம்பர்யம் துறவிகளிடம் இருந்து தொடங்கியதாக நம்ப ப்படுகிறது. தாங்கள் சமாதானத்தை தாங்கி வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் நாக்குகளை குவித்து வெளியே நீட்டுகின்றனர். உண்மையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கரிய நாக்கைக் கொண்டிருந்ததாக நம்பப்படும் மன்னனின் மறுபிறவியாக தாங்கள் இருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும் இதை அவர்கள் செய்கின்றனர்.
முகங்களைத் தேய்த்துக் கொள்ளுதல்
இது உங்களுக்கு வேடிக்கையானதாகத் தோன்றலாம். ஆனால், நியூசிலாந்தில், குறிப்பாக மோவ்ரி பழங்குடியின மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்வதற்கு தங்கள் முகங்களை ஒருவருக்கு ஒருவர் தேய்த்துக் கொள்கின்றனர். அதனால், அவர்கள் தங்கள் மூச்சுகாற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். இது வரவேற்புக்கு அடையாளமான ஒரு சிந்தனையாக இருக்கிறது. மோவ்ரி பழங்குடியினத்துக்குள்ளான தொடக்கமாக, கலாசாரமாக இருக்கிறது. இது ஒரு கவுரவமாகும். அது ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கைகளைத் தட்டுதல்
யாராவது ஒருவர் கைகளைத் தட்டுதல் என்பது அவர்களை ஹலோ என்று வாழ்த்துவது என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஜிம்பாவேயில் ஒரு மனிதர் கைதட்டுவார், இன்னொரு மனிதர் இரண்டு முறை கைதட்டி அதற்கு பதில் மரியாதை அளிப்பார். ஆண்கள் தங்கள். உள்ளங்கைகளை சீராக வைத்துக் கொண்டு விரல்களில் தட்டுவார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வடிவில் தங்கள் கைகளைத் தட்டுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.