/tamil-ie/media/media_files/uploads/2020/08/10-25.jpg)
Nandhini myna instagram myna nandhini
Nandhini myna instagram myna nandhini : விஜய் டிவி மைனா என்றால் அறிமுகமே வேண்டாம். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர். வம்சம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மைனாவிற்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தது விஜய் தொலைக்காட்சி தான்.
அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பவர் ‘மைனா’ நந்தினி’இவர் நடிக்கும் சீரியல்கள் டிஆர்பியிலும் நல்ல இடத்தை பெற்றன.
சினிமா பயணம் நல்லதாக அமைந்தாலும் நந்தினியின் திருமண வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2 வருடம் முன் கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த மைனா சினிமாவில் முழு கவனம் செலுத்தினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் நந்தினி குறித்த பேச்சு தான். கார்த்திக் குடும்பத்தினர் மிகப் பெரிய குற்றச்சாட்டுக்களை நந்தினி மீது வைத்தனர். சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள். கேலி கிண்டல்கள் அவமானங்களை சந்தித்தார் மைனா.
நந்தினி லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த போது தான் அவரின் கணவர் தற்கொலை செய்தி அவருக்கு தெரியவந்தது. கணவர் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலை அறிந்தும் எந்தவிதமான ரியாக்சனும் காட்டவில்லை என அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களும் நந்தினி மீது வைக்கப்பட்டனர். ஆனால் அவரது வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பிஸியாகிவிட்டார்.
இந்நிலையில் நந்தினிக்கும் அவருடன் நடித்து வரும் நடன இருக்குனருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நந்தினி முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு மட்டும் மாறவில்லை. அவரின் நம்பிக்கையும் அந்த சிரிப்பில் தான் அடங்கி இருந்தது. அதுமட்டுமில்லை தான் ஏற்கும் கதாபாத்திரத்திலும் நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைப்பார்.
பின்பு இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்து இப்போது நந்தினி பொறுப்பான அம்மாவாக உள்ளார். இன்னும் சில மாதங்களின் குட்டி நந்தினி அல்லது குட்டி யோகேஷ் பிறக்க போகிறார்கள். சமீபத்தில் நந்தினிக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது.
';தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.