நடிகர் நெப்போலியன் மகனின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் தம்பதியினர் முதல் முதலாக பேட்டி அளித்துள்ளனர். இதில் அவர்கள் ஜப்பானில் திருமணம் வைப்பதற்கான காரணம் குறித்தும் தெளிவாக விளக்கி உள்ளனர்.
தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடியின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தம்பதியினர் தங்களது திருமணம் பற்றிய ஸ்வாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதில் இருந்தே தசைச் சிதைவு என்கிற அரியவகை நோய் இருந்துள்ளது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போனது. இதையடுத்து சித்த வைத்தியத்தின் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன், மகனுக்கு தேவையான மருத்துவ வசதி அமெரிக்காவில் இருந்ததால் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
மகன் மீது அதிக பாசம் வைத்திருக்கும் நெப்பொலியன் தனது மகன் திருமணத்தை ஜப்பானில் மிகவும் ஆடம்பரமாக நடத்த முடிவு செய்துள்ளார். நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துள்ளது.
அந்த கனவை நனவாக்கும் வகையில் தனுஷின் கல்யாணத்தையே ஜப்பானில் நடத்தி இருக்கிறார் நெப்போலியன். திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணுடன் தனுஷுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். அனைவரும் ஜப்பானிற்கு சென்று திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதியினர் திருமணத்திற்கு முன்பாகவே இருவருக்கும் பிடித்து விட்டதாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் மிக கவனமாக தங்களுக்கு பிடித்த மாதிரி பார்த்து பார்த்து செய்தததாகவும் தெரிவித்தன.
தனுஷுக்கு சிறுவயதில் இருந்தே ஜப்பான் செல்ல வேண்டும் என ஆசை இருந்ததால் திருமணத்தையும் ஜப்பானிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் ஜப்பானில் திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற அனைவரையும் ஒரு சிறிய சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் உணவும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.