சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய நார்த்தங்காய் – 1 கப்
வெல்லம் – ½ கப்
புளிக்கரைசல் – ½ கப்
பச்சைமிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை
கடுகு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 6 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 10
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி தனியா, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
அடுத்து அதில் நார்த்தங்காயை போட்டு நன்கு வதக்கவும். அடுத்து பச்சை மிளகாய் சேர்க்கவும். இவை வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான நார்த்தங்காய் ஊறுகாய், புளிக்கரைசல் சேர்ப்பதால் பச்சடியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“