நார்த்தங்காய் மட்டுமல்ல அதன் இலை கூட மருத்துவ குணம் நிறைந்தது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. நார்த்தங்காய் இலை உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகளை குணமாகும். செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது. இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின் போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இப்படி மருத்துவ குணம் நிறைந்த நார்த்தங்காய் இலையில் துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இளம் நார்த்தை இலை- 20
காய்ந்த மிளகாய்- 4
தேங்காய்- 1 கப்
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
இளம் நார்த்தை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை அகற்றி விட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. எப்போதும் போல் கடுகு, கடலைப் பருப்பு தாளித்து சேர்க்கலாம் இன்னும் சுவையான இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“