உடல் சூடு பிரச்சனைக்கு தீர்ப்பு; நார்த்தை இலை சட்னி: 10 நிமிடத்தில் செய்யுங்க

நார்த்தங்காய் இலை துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

நார்த்தங்காய் இலை துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
நார்த்தங்காய் இருக்கா? அப்போ இந்த மாதிரி செய்யுங்க: ஸ்பெஷல் ரெசிபி
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நார்த்தங்காய் மட்டுமல்ல அதன் இலை கூட மருத்துவ குணம் நிறைந்தது. நார்த்தங்காய் இலை உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகளை குணமாகும்.  இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது. 

Advertisment

தேவையான பொருட்கள் 

இளம் நார்த்தை இலை- 20 
காய்ந்த மிளகாய்- 4 
தேங்காய்- 1 கப் 
புளி- எலுமிச்சை அளவு 
உப்பு- தேவையான அளவு

செய்முறை 

Advertisment
Advertisements

இளம் நார்த்தை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை அகற்றி விட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. எப்போதும் போல் கடுகு, கடலைப் பருப்பு தாளித்து சேர்க்கலாம் இன்னும் சுவையான இருக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: