/indian-express-tamil/media/media_files/8CBPXpJBHXaNe7qqtJ4v.jpg)
நாட்டின் 75-வது குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை நாடு முழுவதும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், நீரில் வண்ண கோலப்பொடி மற்றும் மாவை கொண்டு மிதக்கும் வகையில் மகாத்மா காந்தி மற்றும் மகாகவி பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில் கரைந்துவிடும் என்பதால் அது கரைவதற்குள் இரண்டு ஓவியங்களையும் வரைந்துள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.
குடியரசு தினம்: தண்ணீரில் தேசத் தலைவர்கள் படம் வரைந்து கோவை கலைஞர் அசத்தல் #RepublicDay2024 | #Coimbatorepic.twitter.com/FKsEFcXs1T
— Indian Express Tamil (@IeTamil) January 24, 2024
தேசத்தலைவர்களின் ஈர நெஞ்சம் என்றும் நம் இதயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீரில் தலைவர்களின் உருவத்தை வரைந்துள்ளதாக UMT ராஜா தெரிவித்துள்ளார். தேசத் தலைவர்களின் உணர்வு மற்றும் தேசப் பற்று குறித்து இக்கால இளைஞர்கள், சிறுவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொண்டதாக UMT ராஜா தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.