Advertisment

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நாட்டு கோழி கெட்டி குழம்பு: இப்படி செய்து பாருங்க

நாட்டு கோழி கெட்டி குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Chic kuzh.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாதம்பட்டி ரங்கராஜ் செய்யும் சிம்பிள், சுவையான நாட்டு கோழி கெட்டி குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

முந்திரி 

மிளகு 20 கிராம் 

பட்டை, சீரகம் தலா 5 கிராம் 

சோம்பு 1 டீஸ்பூன்

பூண்டு 100கிராம்

இஞ்சி 50 கிராம் 

வரமிளகாய் 50 கிராம் 

கொத்தமல்லித் தூள் 50 கிராம் 

தேங்காய் 

கறிவேப்பிலை 

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி முந்திரி வதக்கவும். இதை தனியா எடுத்து வைக்கவும். மசாலா வறுக்க பட்டை, சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து வரமிளகாய், இஞ்சி சிறிதளவு , கறிவேப்பிலை போடவும். இப்போது சீரகம், சோம்பு, தேங்காய் மல்லித்தூள் போடவும். 15 நிமிட வதக்க விடவும். அதன்பிறகு வறுத்த முந்திரி சேர்க்கவும். 

அடுத்து இப்போது இந்த கலவைகளை அரைக்க வேண்டும். இப்போது 1 கிலோ நாட்டு கோழி எடுத்து குக்கரில் போட்டு வேக வைக்கவும். அடுத்து 1 கரண்டி அரைத்த மசாலா கலவையை எடுத்து சிக்கனில் சேர்த்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.  அடுத்தாக கெட்டி மசாலா செய்ய கடாயில் நல்லெண்ணை ஊற்றி கடுகு, சோம்பு, வரமிளகாய் விதை எடுத்து சேர்த்து பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

அடுத்து மீதமுள்ள மசாலா கலவையை போட்டவும். சிறிதளவு உப்பு போடவும். இப்போது சிக்கன் 8 விசில் வந்ததும் அதை எடுத்து இதில் போடவும். மீண்டும் வேக விட்டு வதக்கி கடைசியாக மல்லித்தழை சேர்த்து இறக்கினால்  நாட்டு கோழி கெட்டி குழம்பு  ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment