முகத்திற்கு பூசும் பவுடர் உடன் இதை சேருங்க… வீட்டை விட்டு கரப்பான் பூச்சி ஓடிவிடும்!

இந்த லிக்விட் இருந்தால் போதும், உங்கள் வீடு கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் இல்லாத சுத்தமான இடமாக மாறிவிடும்.

இந்த லிக்விட் இருந்தால் போதும், உங்கள் வீடு கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் இல்லாத சுத்தமான இடமாக மாறிவிடும்.

author-image
WebDesk
New Update
Natural cockroach lizard killer

Natural cockroach killer

உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அவற்றை ஓட ஓட விரட்ட ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த வழியை இங்கே காணலாம். இந்த லிக்விட் இருந்தால் போதும், உங்கள் வீடு கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் இல்லாத சுத்தமான இடமாக மாறிவிடும்.

Advertisment

தேவையான பொருட்கள்:

ஒரு பயன்படுத்தாத பவுல்

ஒரு ஸ்பூன் பவுடர் (சாதாரண டேல்கம் பவுடர் பயன்படுத்தலாம்)

Advertisment
Advertisements

இரண்டு கற்பூர உருண்டைகள்

வெதுவெதுப்பான வெந்நீர்

ஸ்ப்ரே பாட்டில் (ஜூஸ் பாட்டில், மூடியில் சிறிய துளைகள் போட்டது)

தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் பவுடரை சேர்க்கவும். பிறகு, இரண்டு கற்பூர உருண்டைகளை கைகளால் நுணுக்கி பவுடருடன் சேர்க்கவும். இப்போது, கை சூடு தாங்கும் அளவுக்கு வெதுவெதுப்பான வெந்நீரை இதில் சேர்க்கவும். வெந்நீர் சேர்க்கும்போது பவுடரும் கற்பூரமும் விரைவில் கரைந்துவிடும்.

கரைந்த இந்த கலவையை, மூடியில் சிறிய துளைகள் போட்ட ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்.

பயன்படுத்தும் முறை:

கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த லிக்விட்டை ஸ்ப்ரே செய்யலாம். குறிப்பாக, சமையலறை கவுண்டர் டாப் மற்றும் சிங்க் பகுதிக்கு அருகில் இரவில் சமையலறை வேலைகள் முடிந்த பிறகு இந்த லிக்விட்டை நன்றாக ஸ்ப்ரே செய்து துடைத்து விடலாம். கரப்பான்பூச்சிகள் அதிகம் வரும் இடமே சமையலறை சிங்க் தான். அங்கே இருக்கும் உணவு கழிவுகளை உண்ணவே அவை வருகின்றன.

கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அந்த இடங்களில் இந்த லிக்விட்டை தொடர்ந்து ஸ்ப்ரே செய்து வாருங்கள். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் தொல்லை அறவே இருக்காது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: