முகத்தில் முடி இருப்பது உங்கள் பளபளப்பை மங்கச் செய்யலாம், மேக்-அப் பொருட்களை பிளென்ட் செய்வதில் தடைகளை ஏற்படுத்தலாம் அல்லது தோல் பராமரிப்புப் பொருட்களின் வேலையில் தலையிடலாம்.
முக முடியை அகற்ற வாக்ஸிங், த்ரெடிங் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற செயல்முறைகளை நாடலாம். இருப்பினும், நீங்கள் வலியைத் தவிர்க்க விரும்பினால், அல்லது ஒரு காசு கூட செலவழிக்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே முக முடிகளை அகற்றுவதற்கான இயற்கையான வழிகளுக்குத் திரும்பலாம்!
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் ரெசிபி இங்கே உள்ளது.
பேக் செய்ய தேவையானவை:
அதிமதுரப் பொடி – 4 டேபிள்ஸ்பூன்
குப்பைமேனி போடி – 2 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
சோம்பு தண்ணீர்
எப்படி செய்வது?
முதலில், 1 ஸ்பூன் சோம்பை, 1 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி சோம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில், குப்பைமேனி இலை பொடி, அதிமதுரப் பொடி, மஞ்சள் பொடி, கடலை மாவு எடுக்கவும்.
பொடியிலிருந்து ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அதனுடன் சோம்பு தண்ணீரை சேர்த்து கலக்கவும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சோம்பு தண்ணீர் சேர்த்து பொடியைப் பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகம், கழுத்தில் நன்கு தடவி, 20 நிமிடம் கழித்து கழுவவும். கழுவுவதற்கு முன், லேசாக தண்ணீரில் முகத்தை நனைத்துக் கொண்டு, மெதுவாக மசாஜ் செய்து கழுவுங்கள்.
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்த, 3 மாதத்தில் உங்களுடைய முகத்தில் இருக்கும் முடிகள் அனைத்தும் தானாகவே உதிரத் தொடங்கிவிடும்.
குறிப்பு: எந்தவொரு அழகுக் குறிப்பையும் முயற்சிக்கும்போது, முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“